fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

May 13, 2012

அன்னை அன்பு


மனிதம் தொலைத்து
மானிடம் அலையுமென்று
ஆதி இறைவன்
அடிக்கணக்கு போட்டு வைத்தான்.
தொலைத்த மனிதம்
தோண்டி எடுப்பதற்காய்
அன்பின் வடிவில்
அன்னையை அனுப்பி வைத்தான்.
சோதனைக்களம்
கண்டு விளையாட
பிள்ளையும் பிறக்க வைத்தான்.
அன்னை அன்பு
உலகம் பரவ
மனிதன் கழகங்கள்
அமைத்து வைத்தான்.
தோல்வித் தண்ணீர்
முகத்தில் பட்டு
அன்னை அமைவிடமாய்
முதியோர் இல்லம்
மனிதன் அமைத்து வைத்தான் .

April 29, 2012

இட்லியாக இருங்கள்


தலைப்பே ஒரு மாதிரி அசத்துகிறது அல்லவா. அதனால்தான் அதன் ஆசிரியர் (சோம வள்ளியப்பன்) அதன் subtitle ஆக இது "சாப்பிடும் இட்லி அல்ல சாதிக்க வைக்கும் இட்லி " என்று நம் சிந்தனையை சாப்பாட்டு பக்கம் இருந்து திருப்புகிறார். திருப்பிய அவர் இந்த புத்தகத்தை சமர்ப்பணமாய் வாசகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனுக்கும் சமர்பிக்கிறார். ஆகவே நானும் சமர்பனத்தை ஏற்றுக்கொண்டு தாள்கள் புரட்டிப் பார்த்தேன்

அருமையான விடயம் இப்புத்தகம் வழியாக ஆராயப்படுகிறது Emotional Intelligence அதாவது உணர்வு பற்றிய புத்திசாலித்தனம் பற்றியதே இந்த புத்தகம் அதற்கே ஆசிரியர் இட்லி எனப்பெயர் வைக்கிறார்

முதலில் பிரபலங்கள் சிலரின் வாழ்க்கை சம்பவங்கள் சிலதை  நாம்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பின்பு மூளை அதன் பகுதி மனம் ,அறிவு அதன் செயற்பாடு .  உணர்ச்சி வேறு அறிவு வேறு என்பதாய் உதாரணங்களோடு தெளிவாய் உணர்த்துகிறார். அத்தோடு  Emotional Intelligence ஆக நாம் செய்ய வேண்டியது அதனால் நமக்கு கிடைக்கும் பலன் இப்படி அலசுகிறது
இந்த புத்தகம் இதில்  Emotional Intelligenc    குறித்து ஆசிரியர்  குறிப்பிடுவது
"தேடுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்க வேண்டும். அதுதான் முயற்சிக்கு மரியாதை அந்த மரியாதையை அனைவரும் பெறவேண்டும் அதற்கான ஒரு வலி Emotional Intelligence"

இந்த புத்தகம் வாசித்த பின்னர் சிறிதாய் ஒரு மாற்றம் பாதிப்பு எனக்குள்  தெரிந்தது ஒரு நல்ல புத்தகம் செய்ய வேண்டிய வேலையில் ஒன்றை இது செய்கிறது ஒன்றல்ல பலதை. இந்த புத்தகத்தின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன் இந்த புத்தகத்துக்கு பிறகு அவரது மற்ற புத்தகங்களையும் தேட வைக்கிறார்.

             உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இத்துறை பற்றி தமிழில் வேறு புத்தகங்கள் இல்லை. இந்த எளிய அறிமுக அதே நேரம் போதுமான செய்திகளை கொண்ட இப்புத்தகத்தை எழுதியதற்காக சோம.வள்ளியப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 புத்தகத்தின் பெயர் :-         இட்லியாக இருங்கள்
புத்தகத்தின் ஆசிரியர் :-   சோம. வள்ளியப்பன்.
பதிப்பகம் :-                          கிழக்கு ஒலிப்புத்தகம்
வகை :-                             சுய முன்னேற்றம்
தலைப்புக்கள் :-                  15
பக்கங்கள் :-                         140
இந்திய விலை :-                60 ரூபா
இலங்கை விலை :-           225 ரூபா

இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.

உங்கள் அபார வெற்றியின் வாசலை இப்புத்தகம் மூலம் திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன். '

April 22, 2012

பேதை மகள்



ஒழுகுற வீடு ஒன்டுதான்
எங்களோட சொத்து
பள்ளிக்குச்  சென்று படி
காகிதப்பூ தலையில சூடாத
மல்லிகை பூ நான் பாக்கன்
பெத்த மகளை அனுப்பி வச்சான்
சொத்தில்லா அந்த அப்பன்

நல்லாத்தான் படிச்சா அவள்
பாடத்தவிட அவன
அவன்ட கை பிடிச்ச போதையில
பள்ளிக்கூடம் தனை மறந்து
பாதையிலே திரிந்திருந்தாள் பேதை மகள்

ஆத்தி மகன் வேலைக்காய்
கொழும்புக்கு சென்றவன்
கூத்தி மக்கள் சகவாசம்
களித்து விளையாட தலை விட்டான்

கை பிடிச்ச தலை மகன்
கரம்பிடிக்க வாருவான் என்று
ஏங்கித் தவிக்கிறாள்
மடியில் நீர் துளிகள்
விட்டு ஓட்டை பார்க்கிறாள்
அதில் மாற்றம் இல்லை
மன ஓட்டை மட்டும் பெரிதானது
 
 

April 16, 2012

இதுவரை நான்


வாழ்கையில் நான் செய்யும் உருப்படியான காரியங்களில் ஒன்று இந்த வாசித்தல் பல்வேறு தருணங்களில் என் உணர்வுகளை புத்தியை தீட்டும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு. நல்ல புத்தகங்கள் நல்ல  நண்பன் என் தனிமைகான துணை நான் வாசித்து ரசித்த புத்தகங்களை உங்களுடன் பகிர்கிறேன் புத்தகக்கடையில் சேமிக்கிறேன்  

                                              இதுவரைநான்
எனது கவிஞனின் நூல் ஆம் கவிப்பேரரசு வைரமுத்துவை எனது கவிஞன்  என சொல்வதில் பெருமிதம் எனக்கு அவரது வரிகள், புத்தகங்கள் மீது தீரக் காதல் எனக்கு. என் கவிஞன் தன்னைப் பற்றி எழுதிய புததகமே இதுவரை நான்

தலைப்பை பற்றி இப்புத்தகத்தின் ஆசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார்
இதுவரைநான் எனும் இந்தப் படைப்பு சுயசரிதம் அன்று எனக்கு சுயம் உண்டே  தவிர சரிதம் கிடையாது 
எத்தனை  அடக்கமான பேச்சு இது உங்கள் தன்னடக்கம் வைரமுத்து ஐயா நீங்கள் எமக்கு என்றுமே சரிதம்தான்

இந்த புத்தகத்தில் கவிப்பேரரசு பிறப்பு தொடக்கம் அவரது முதல் பையன் பிறப்பு வரையிலான விடயங்களை  அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக தந்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் வாழ்கையின் எதார்த்தம் சொல்கிறது

இந்த புத்தகம் பற்றி கவிப்பேரரசு கடைசியாய் சொல்கிறார்
இது 
சுயம் தேடியலைந்த 
ஓர் இளைஞனின் சுயசரிதை 
எழுதப்பட்ட போது வயது இருபத்தியெட்டு    

இந்த புத்தகம்  வாசித்து முடித்த பின்பு என் மீதும் என் வாழ்வு மீதுமான நம்பிக்கையின் பெறுமதி இன்னும்  அதிகமானது

இதுவாரை நான் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்

March 24, 2012

காரணம் நீ தான்





தலை சாய்த்து
கண்ணயரும் பொழுதுகளில்
வரும் கணாக்கள்
அதில் நீ வந்தால்
கொள்ளை பிரியம் எனக்கு

அன்றொரு நாள்

செவ்வானச் சிதறல்களின்
கீழிருந்து
சில்லுகள் சேமிக்கிறேன்
காற்றலுத்தம் அதிகமாகி
சில்லுகள் சிதறின.

காலத்தை பற்றி இழுக்கிறேன்
அது எனை எட்டி உதைக்கிறது.

ரோஜா இதழ்கள் புசிக்கிறேன்
அதிலும் முட்கள் முளைகின்றன

நாட்கள் எண்ணி உறவுகள்
மனங்களுக்கு மதிப்பில்லை
ஊருக்காய் புன்னகை
உள்ளுக்குள் பூகம்பம்.

இவை ஏன் என் கணாக்களில்
நீ எனை விட்டு போகிறாயா?

நிஜங்கள் துறந்து
நிழல்களோடு நீ பயணிக்கிறாய்
உறவுக்காய் போகிறாயா?
போ

உனக்காய் ஓர் உறவு
உறவின்றி நிற்கிறது
எப்போதவது திரும்பி பார்
அப்போதும் என் கண்ணில்
விழுவது உன் விம்பமே

இப்போதும் சிரிக்கிறேன்
கணாக்களில்

காரணம் நீ தான்  

March 18, 2012

BE HAPPY


அப்பாடா பஸ் நிக்குது. ஒரு சிட்டும் இருந்துட்டா சந்தோஷம். ஒருவாறாய்
பஸ்ஸில் ஏறினான் கார்த்திக். பஸ்ஸின் பின்னால் ஒரு சீட் போய் அமர்ந்து கொண்டான்.  பக்கத்தில் ஒரு பெண் வயது  அவன் கணிப்பில் 25 -30 க்குள் இருக்க வேண்டும். ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தாள்  அப்பொழுது அவனது தொலைபேசி சினுங்கியது.

Hello


Hello மச்சான் Result வாந்துட்டுடா?


என்ன வந்துட்டா என்னடா Result என்ட result? 


மச்சான் நீ ஒரு பாடம் out 3A 2B நானும் தான்டா Don't worry be happyda 
Happy Journeyda

Ok மச்சான் Byeda 



ஆம் இன்று அவன் கல்லூரிக்கு சொல்லவில்லை. அடுத்த இரண்டு நாலும் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சொல்லவே இன்று புறப்பட்டான். அதற்குள் அவனது 2 nd semester Result இப்படி நண்பன் வாயிலாக கிடைத்தது. பரவாயில்லை முதலாவது referd தேத்தி கொண்டான்.

இப்பொழுது நிமிர்ந்து அருகிருந்தவள் முகம் பார்த்தான். அம்மங்கையின் முகத்தில் புன்னகை மறைந்திருந்தது. ஏதோ பிரச்சினை போல தென்பட்டால். இப்பொழுதும் தொலைபேசி சினுங்கியது. இம்முறை சினுங்கியது அவளது தொலைபேசி. அவள் கதைத்தது அவனுக்கு விளங்கவில்லை ஆனால் அவளது முகபாவங்களால் சில விடயங்களை சொல்லியது ஏதோ பிரச்சினை போல விளங்கியது.

இதட்கிடையில் ஒரு குழந்தையுடன் தாய் ஒருத்தி வந்ததால் அவனது சீட்டை அவன்  குடுத்துவிட்டு அவனது  பையை அம்மங்கையிடம் குடுத்து விட்டு எழுந்து நின்றான். எப்படியாவது அவளிடம் சொல்லிடனும் மனசுக்குள் நினைத்துக்கொண்டான்.
அப்பொழுது அவள் பேசினாள்   அவனிடம்

தம்புள்ளட்ட டிக்கட் எகாக் ( தம்புள்ளைக்கு டிக்கட் ஒன்டு )

பணத்தை  நீட்டினாள்

ம் அவள் சகோதர மொழி பெண். டிக்கட் வாங்கி கொடுத்தான் அவன். இருந்தாலும் பரவாயில்லை எப்படியாவது அவளிடம் சொல்லிவிடனும். நீண்ட நேரம்  முயட்ச்சிகிறான் இதற்குள் பஸ்ஸில் நெரிசல் வேறு.

அப்படி இப்படியாய் அவன் இறங்கும் இடம் வந்துவிட்டது. எப்புடியாவது சொல்லுவம் என்று மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனது பையை வாங்கியவனாக அவளை பார்த்து சொன்னான்

Don't Worry Sister Be Happy

அவள் அவனை பார்த்து சிறு புன்னகை வீசினாள்

March 05, 2012

உயிர்த் தோழியும் தோழனும்

ஒரு நண்பன் படும் துயரம் கண்டு . அவனது உயிர் தோழி. அவளது வாழ்வில் முதன்முறையாய் கவிதை நெய்கிறாள். அதுவும் அவளது தோழனுக்காய்

 வேதனை


எவ்வளவு கொடுமையானது
எவ்வளவு கஷ்டமானது
ஏன் உன்னை சேர்ந்தது
ஓ......... எனக்கு புரிந்து விட்டது
அந்த வேதனைக்கும்
உன்னை பிடித்து விட்டது போல
உன்னை பிடித்தவர்கள்
மனிதர்கள் மட்டும் தான் என நினைத்தேன்
ஆனால் இன்றுதான் தெரியும் இவற்றுக்கும் உன்னை பிடிக்கும் என்று.
உன் வேதனையில் முதன்மை வகிப்பது நான் தான் .
என்னால் உனக்கு எவ்வளவு கஷ்டம்
நான் உன் வாழ்வில் வந்திருக்காவிட்டால்
இவ்வளவு வேதனை உனக்கு வந்திருக்காது
ஆனாலுன் இதை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய் .
ஆனால் இது தான் உண்மை தோழா.


நான் அந்த இறைவனிடம் உனக்காக கேட்பது
உன் வேதனையில் அரைவாசியாவது எனக்கு தர வேண்டும் என்று ;

நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று கேட்பேன் செய்வாயா?
?
?
?
?
?
?
என்மேல் வைத்திருக்கும் அன்பை குறைத்து விடு,
அப்பொழுதாவது உன்னை சூழ்ந்திருக்கும் வேதனையில்
சிறிதளவாவது குறைந்து விடும் நண்பா
உன் நண்பிக்காக
உன் நண்பியின் திருப்திக்காக











  இக்கவியை வாசித்த தோழனோ அழவில்லை மாறாக சிரிக்கிறான். அவளுக்காய் அவனும் கவிதை வரைகிறான். இக்கவிதையில் உவமை இருக்காது உணர்வு இருக்கும்

வாக்கு 







என் உயிர் தோழியே !
வேதனை கொடியதுதான்.
அதை நான் இப்பொழுது நேசிக்கிறேன்.
எனக்காய் என் தோழி
வார்த்தை கோர்த்து
கவிதை நெய்தாள்.
அக்கவியின் ஒவ்வொரு வரியிலும்
அன்பை சொரிந்தாள்
நீ என் வேதனையா
யார் சொன்னது
வாய்மூடு  தோழி
வேதனையும் வேதனைப்படும்.
எனக்கும் உனக்கும் உள்ளது
அன்பு தூய்மை அன்பு
அதை எடை போட மாட்டேன் நான்
வாக்குத்தருகிறேன்
உன் மீதுள்ள அன்பை குறைகிறேன்
எப்போதனில்
என் விலா எழும்பு மக்கும் போது.


                                                                                          இது கற்பனையல்ல
                                                                              

Related Posts Plugin for WordPress, Blogger...