fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

August 25, 2011

இனிப்பு

வனத்திலிருந்து வண்டு வந்து
பூத்திருந்த பூ கடித்து
கனிவுடன் காதல் சொன்ன
கற்கண்டுப் பொழுதுகள்

தையல் தலை தனை தடவி
காதோரம் உதடு வைத்து
உதட்டு வழி காதல் சொன்ன
உன்னத நினைவுகள்

கோகிலத்து பறவையொன்றை
மரக்கிளை மீதிருந்து
கூவி அழைத்தெடுத்து
குயில் குரலால் காதல் சொல்லி
குதுகலித்த உள்ளங்கள்

இடி மின்னல் மழை பார்த்து
மின்னொளிகள் அனைத்து விட்டு
மெழுகுதிரி வெளிச்சத்தில் கவிதையில்
மெழுகாய் உருகிய நிமிடங்கள்

அனைத்தும் ஏதோ சொல்கிறது
தொலைந்து விட்டோம் என்றோ ?
தேடி எடுங்கள் என்றோ?

August 17, 2011

மர்மமாகும் மர்மமனிதன்

இந்த நாட்டு மக்களின் பெருன்பான்மையானோரை பயத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் அதாவது கிரீஸ் மனிதன் யார் என்ற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு இன்று மக்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் அளவுக்கதிகம் மக்களின் தோழன் எனப்படும் பாதுகாப்பு படையீனர் இன்று மக்களின் எதிரிகளாக நோக்கப்படுகின்னறனர் என்பதற்கு நாட்டில் மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, கண்டி,பொலன்னருவ போன்ற பல்வேறு பகுதிகளில் நடந்த சம்பவமும் கிண்ணியா சம்பவமும் காரணம் காட்டி நிற்கின்றன.

இந்த மர்ம காடையர்களின் பிரதான நோக்கம் பெண்களாக இருப்பதால் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி படித்த சில பெண்பிள்ளைகளும் பயத்தினால் சொந்த ஊர் திரும்பிவிட்டனர் ஆனால் கல்லூரிகள் வழமைபோல் நடைபெறுகின்றது அவர்களது கல்வியின் நிலைக்கு யார் பொறுப்பு. இது வரையும் நாடு அறிந்தளவு அரசாங்கம் எந்தவொரு பாரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை . மக்களாக முனைந்து பிடித்து கொடுத்த காடையர்களில் சிலரும் பல்வேறு காரணம் காட்டி விடப்பட்டனர் இனியும் அரசாங்கம் மெளனம் காக்குமேயானால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்புபடையீனர் மீதும் நம்பிக்கையீனம் அதிகரிக்கலாம் .உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு எதிர்பாராத வேளையில் தோன்றி மறையும் இவர்கள் யார்? எதற்காக பெண்களை மட்டும் தாக்கவேண்டும்.? நாடு முழுவதும் ஒரே தடவையில் உலாவரும் இவர்கள் எத்தனை பேர்? எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? இவையே இன்று மக்களின் சந்தேகம்.

ஆகவே இவ்விடயம் வெறும் வதந்தியாக இருந்தால் இது தொடர்பான விழிப்புணர்வையும் உண்மையாயின் இதை அழிப்பதற்கான நடவடிகையையும் அரசாங்கம் எடுப்பது அவசியமாகிறது

July 23, 2011

மரணம்

மரணம்
வாழ்க்கைக்கான
முற்றுப்புள்ளியானால்
நானும் தயார் சுவைக்க.
என் வாழ்கையை
வரைந்த பிறகு.
ஒவ்வொரு முறையும்
என் எண்ணங்கள்
மறுக்கப்படும் பொழுது
இறந்தே பிறக்கிறேன்.
பேனா கூர் முனையால்
வெள்ளைக் காகிதத்தில்
பேனையின் வருடல்
காவியம் படைபதுக்கென்றல்
நானும் தயார்.
பெரிய வெற்றிகேன்றால்
நானும் தயார்.
ஆனால் வாழ்வே
இலக்கிய திருட்டுக்கான
பேனா போல்
வலிகளால் நிரப்பப்பட்டால்
மரணமும் தொடர்கதைதான்.

July 17, 2011

முதல் அடி

இன்றுதான் எனது முதல் பதிவின் பிரசவம் . இனி தடவி தடுமாறி என் பதிவுகள் இங்கு அரங்கேறும். தம்பனுரில் இப் பார் கண்டேன். வரலாற்றை
சொல்லும் பொலன்னாறுவைக்கு வடகிழக்கே 14KM நோக்கி சென்றால் . என் தாய் மண் வாசம் வீசும். பெரிய வரலாறில்லை ஆனால் நிறைய வரலற்றை படித்தவர் இங்குண்டு.பச்சை வயல்களில் பாடுபடும் கரங்கள் கணக்கில் அதிகம். ஊருக்கு 2 பள்ளிகூடம் 3 பள்ளிவாயல் இவைதான் எம் ஊருக்கான தூண்கள். அங்கே பிறந்து வாழந்து இப்போது திருகோணமலையில் HNDIT படித்து கொண்டிருக்கிறேன் நான். இங்கு வந்துதான் கணணி உலகே எனக்கு அறிமுகமானது. இப்போது இப் பதிவின் மூலமாக நான் உங்களிடத்தில் அறிமுகமாகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...