fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

November 07, 2015

அனுசாந் நான் கவிதை


கவிதை மீதான காதல் என்னில் எப்போது பிறந்தது நான் இன்னும் தேடி விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. பொதுவாகவே வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் பூஜ்ஜியத்தால் பெருக்கப் பட்ட சூன்யங்கள். எத்தனை கவிஞ்சர்கள் எத்தனை கவிதைகள் தேடி பொறுக்கி படித்தும் இன்னும் அந்த ரசனையும் தாகமும் அடங்கியதாக இல்லை.

கவிதைகள் வாசிப்பது ஒரு ரசனை என்றால் கவிதைகளை பிரசவித்த கவிஞன் வாசிக்க கேட்பது இன்னுமொரு ரசனை. காரணம் அதை பிரசவித்தவனுக்கே வாசிப்பவனை விட அந்த கவிதையின் மொழியும் அதன் உணர்வுகளும் நன்கு தெரியும். அவனது விரல்கள் பிரசவித்ததை அவனது குரல்களால் அனைத்தெடுக்க முடியும். எத்தனையோ கவிதைகள் வாசிக்க கேட்டு அழுது இருக்கிறேன் சிரித்து இருக்கிறேன் கோபப் பட்டு இருக்கிறேன்.

இந்த கவிதைகளை ஒலி வடிவாக கேட்பதோடு ஒரு மெல்லிய இசை தழுவிச் சென்றால் கண்களில் அந்த கவிதை வரிகள் தோன்றினால் அது எங்கோ எமை கூட்டிச் சென்று விடும். அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்குவது போல . காதலியில் தாவணியில் தலை துவட்டுவது போல. தந்தையிடம் திட்டு வாங்குவது போல சுகமான உணர்வு

இப்படியான  கவிதைகள் ஜாபிர் அவர்களால் ஆரம்ப காலங்களில் இலங்கை தொலைக்கட்சிகளில் தொகுத்து வழங்கப் பட்ட நிகழ்சிகளில் இடம் பெரும் பல நாட்கள் தவம் இருந்து பாத்திருக்கிறேன் பெரும் பாலும் அதில் மொழி பெயர்ப்பு கவிதைகள் தான் இடம் பெரும் இப்படி ஒரு கவிதை தொகுப்பு இருவெட்டாய் வெளி இட வேண்டும் என்பது எண்ணமாக இருந்தது

அப்படி ஒரு தொகுப்பு என் நண்பரால் வெளி வந்தது. என் கனவு இன்னொரு கண்களிலும் தோன்றி இருக்கிறது அது பிரசவமாகி விட்டது. ஆம் நண்பர் அனுசாந்தின் தலைப் பிரசவம்தான் அது அதுவே எங்களை நண்பர்களாக்கியது. ஆனால் ஒரு சிறு கவலை நான் 4 வருடங்கள் திருமலையின் கழித்திருக்கிறேன் ஆனால் அவர் அறிமுக மானதோ நான் இலங்கையை விட்டு வந்த பின்னரே. முன்பே அறிமுகமாகி இருந்தால் இனிய கவிதை பொழுதுகள் அவரோடு கழிந்திருக்கும்.




//வாசிப்பு எங்களிடம் மங்கிப்போன ஒன்று இதனால் நல்ல கவிதைகளையும் தவர விடுகிறோம் . நண்பர் Anushanth Sajeethaஇதற்காகவே தலைப் பிரசவத்தை ஒலி ஒளி வடிவில் தந்திருக்கிறார் ..... கவிதைகளைச் சுமந்த கவிஞன் தலைப் பிரசவமாய் பிரசவித்துள்ளான்//இது நண்பரின் கவிதை தொகுப்பை பார்த்ததும் என் முகப் புத்தகத்தில் குறித்துக் கொண்டது

அனுசாந்தின் தலைப் பிரசவம் ... இது அவர் பிரசவித்த கவிதைகளுக்கு தந்தையாய் வைத்த பெயர் அழகிய பிரசவம் ரசிகனாய் நான் வைக்கும் பெயர் .. தமிழ் மிதான அவரது காதல் அவரது காதலி மிதான அவரது காதல் வார்த்தைகாளாய் பிரசவமாகி உள்ளது. இந்த பதிவு எழுதும் இந்த நொடி வரை ஒரு மனவர்த்தம் உள்ளது இன்னும் அவரது தொகுப்பை முழுமையாய் கேட்டு முடிக்க வில்லை ஆனால் கவிஞரோ அடுத்த படைப்புக்கு தயாராகி விட்டார் 

ஒரு கவிஞன்
உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்
                                  வைரமுத்து 


அவரது கவிதைகள் பற்றி நான் விரிவாய் இங்கு அலசவில்லை காரணம் அது அலசப் பட வேண்டியதல்ல ரசிக்கப் பட வேண்டியது ... வாழ்த்துகள் நண்பா கலைப் பயணம் தொடர

அவரது சில கவிதைத் தடங்களை முகப் புத்தகத்தில் பார்க்கலாம் 
https://www.facebook.com/anushanth.anushanth

Related Posts Plugin for WordPress, Blogger...