fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

November 07, 2015

அனுசாந் நான் கவிதை


கவிதை மீதான காதல் என்னில் எப்போது பிறந்தது நான் இன்னும் தேடி விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. பொதுவாகவே வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் பூஜ்ஜியத்தால் பெருக்கப் பட்ட சூன்யங்கள். எத்தனை கவிஞ்சர்கள் எத்தனை கவிதைகள் தேடி பொறுக்கி படித்தும் இன்னும் அந்த ரசனையும் தாகமும் அடங்கியதாக இல்லை.

கவிதைகள் வாசிப்பது ஒரு ரசனை என்றால் கவிதைகளை பிரசவித்த கவிஞன் வாசிக்க கேட்பது இன்னுமொரு ரசனை. காரணம் அதை பிரசவித்தவனுக்கே வாசிப்பவனை விட அந்த கவிதையின் மொழியும் அதன் உணர்வுகளும் நன்கு தெரியும். அவனது விரல்கள் பிரசவித்ததை அவனது குரல்களால் அனைத்தெடுக்க முடியும். எத்தனையோ கவிதைகள் வாசிக்க கேட்டு அழுது இருக்கிறேன் சிரித்து இருக்கிறேன் கோபப் பட்டு இருக்கிறேன்.

இந்த கவிதைகளை ஒலி வடிவாக கேட்பதோடு ஒரு மெல்லிய இசை தழுவிச் சென்றால் கண்களில் அந்த கவிதை வரிகள் தோன்றினால் அது எங்கோ எமை கூட்டிச் சென்று விடும். அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்குவது போல . காதலியில் தாவணியில் தலை துவட்டுவது போல. தந்தையிடம் திட்டு வாங்குவது போல சுகமான உணர்வு

இப்படியான  கவிதைகள் ஜாபிர் அவர்களால் ஆரம்ப காலங்களில் இலங்கை தொலைக்கட்சிகளில் தொகுத்து வழங்கப் பட்ட நிகழ்சிகளில் இடம் பெரும் பல நாட்கள் தவம் இருந்து பாத்திருக்கிறேன் பெரும் பாலும் அதில் மொழி பெயர்ப்பு கவிதைகள் தான் இடம் பெரும் இப்படி ஒரு கவிதை தொகுப்பு இருவெட்டாய் வெளி இட வேண்டும் என்பது எண்ணமாக இருந்தது

அப்படி ஒரு தொகுப்பு என் நண்பரால் வெளி வந்தது. என் கனவு இன்னொரு கண்களிலும் தோன்றி இருக்கிறது அது பிரசவமாகி விட்டது. ஆம் நண்பர் அனுசாந்தின் தலைப் பிரசவம்தான் அது அதுவே எங்களை நண்பர்களாக்கியது. ஆனால் ஒரு சிறு கவலை நான் 4 வருடங்கள் திருமலையின் கழித்திருக்கிறேன் ஆனால் அவர் அறிமுக மானதோ நான் இலங்கையை விட்டு வந்த பின்னரே. முன்பே அறிமுகமாகி இருந்தால் இனிய கவிதை பொழுதுகள் அவரோடு கழிந்திருக்கும்.




//வாசிப்பு எங்களிடம் மங்கிப்போன ஒன்று இதனால் நல்ல கவிதைகளையும் தவர விடுகிறோம் . நண்பர் Anushanth Sajeethaஇதற்காகவே தலைப் பிரசவத்தை ஒலி ஒளி வடிவில் தந்திருக்கிறார் ..... கவிதைகளைச் சுமந்த கவிஞன் தலைப் பிரசவமாய் பிரசவித்துள்ளான்//இது நண்பரின் கவிதை தொகுப்பை பார்த்ததும் என் முகப் புத்தகத்தில் குறித்துக் கொண்டது

அனுசாந்தின் தலைப் பிரசவம் ... இது அவர் பிரசவித்த கவிதைகளுக்கு தந்தையாய் வைத்த பெயர் அழகிய பிரசவம் ரசிகனாய் நான் வைக்கும் பெயர் .. தமிழ் மிதான அவரது காதல் அவரது காதலி மிதான அவரது காதல் வார்த்தைகாளாய் பிரசவமாகி உள்ளது. இந்த பதிவு எழுதும் இந்த நொடி வரை ஒரு மனவர்த்தம் உள்ளது இன்னும் அவரது தொகுப்பை முழுமையாய் கேட்டு முடிக்க வில்லை ஆனால் கவிஞரோ அடுத்த படைப்புக்கு தயாராகி விட்டார் 

ஒரு கவிஞன்
உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்
                                  வைரமுத்து 


அவரது கவிதைகள் பற்றி நான் விரிவாய் இங்கு அலசவில்லை காரணம் அது அலசப் பட வேண்டியதல்ல ரசிக்கப் பட வேண்டியது ... வாழ்த்துகள் நண்பா கலைப் பயணம் தொடர

அவரது சில கவிதைத் தடங்களை முகப் புத்தகத்தில் பார்க்கலாம் 
https://www.facebook.com/anushanth.anushanth

September 01, 2015

நானும் விரிவுரையாலறாய் - 1



ஒரு தொழிலை நாம் விட்டு வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான் இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள் அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான் என எண்ணத் தோன்றுகிறது.

நான் எனது தகவல் தொழில் நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது. அதற்காக எனது நண்பர்கள் எல்லாம் அரச காரியாலயங்களை தெரிவு செய்ய .நானும் சொந்த ஊருக்கு (polonnaruwa)  திரும்பி இருந்தேன் அரச காரியாலயங்களில் இடம் தேட.
அந்த நேரத்தில் எனது சிரேஷ்ட (senior ) சகோதரியிடம் இருந்து வந்த அழைப்பின் பெயரால் மீண்டும் நான் கல்லூரில் கல்வி கற்ற திருகோணாமலை நகரத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கியமான தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Esoft Metro Campus நிறுவனத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு சென்றேன். இந்த இடத்தில்  ஒரு விடயம் ஞாபகப் படுத்தப் பட வேண்டும் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்ததால் Esoft ,ICBT ,BCAS ,IBS  போன்ற நிறுவனங்களில் கற்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்தது இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்த நிறுவனங்களில் ஏதும் எமது மாவட்டத்தில் அந்த நேரத்தில் காணப் படவில்லை ஆகவே வெளியூர் சென்றுதான் கற்க வேண்டும் அதற்கான செலவுகள் அதிகமாக கணப் பட்டமை இரண்டாவது இந்த மாதிரியான தனியார் நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என எண்ணியமை ( அது இல்லையென பின்னாட்களில் புரிந்தது)

இப்படி நாம் படிக்கவே முடியாது என எண்ணிய இடத்தில் விரிவுரையாளருக்கான நேர்முக பரீட்சைக்கு வந்திருப்பது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நேர்முகப் பரீட்சைக்கு நேராக சொந்த ஊரில் இருந்து வந்து இரங்கி  திருகோணமலையின் மத்திய பஸ்தரிப்பிடத்துக்கு எதிரில் அமைந்து உள்ள NSB BUILDING என அழைக்க பட்ட கட்டிடத்தில் இரண்டாவது மாடிக்கு ஏறினேன். நிறையவே தைரியம் இருந்தது காரணம் அதற்கு முதல் நாளே எனது சிரேஷ்ட மாணவியிடம் call  பண்ணி ஆயிரம்  கேள்விகள் கேட்டாகி விட்டது ஏன் என்றால் அவரும் அங்கேதான் வேலை பார்க்கிறார்.

கண்ணாடி கதவு திறந்து உள் நுழைந்ததும் வாரவேட்பரையில் ஒரு பெண் good morning என்றார் பதிலுக்கு நானும் good morning சொல்ல . sir நீங்க interview குதனே வந்து இருக்கிங்க உள்ள போங்க இதான் manager room என எதிரில் இருந்த room ஐ காட்டினால். கதவைத்திறந்து உள்ளே நுழைந்தேன்  youtube ,google அனைத்திலும் தேடிய How to face interview மனதிற்குள்ளே ஓடியது இதுதான் நான் தகவல் தொழில் நுட்பம் கற்ற பின்பு சந்திக்க போகும் முதலாவது நேர்முகப் பரீட்சை.

Excuse me may i coming என்ற வாசகத்துடன் உள் நுழைய Yes, Coming என்று வரவேற்றார் அன் நிறுவனத்தின் முகாமையாளர் Dewananth Kumarakurunathan . நீங்கதான fasni    cv தாங்க பாப்பம் என தமிழிலே ஆரம்பித்தது புது தெம்பை எனக்கு வழங்கியது பின்னர் சில கேள்வி விடை என நேர்முகப் பரீட்ச்சை இறுதியாய் சொன்னார் எல்லாம் ok  நாளைக்கு வந்து class ஒன்டு எடுங்கோ மாணவர்களில் feedback ஐயும் நீங்க எப்படி class எடுக்கிறிங்க என்டுரத்தையும் பொறுத்தே Result . எல்லா Class உம் English லதான் ஆனா நீங்க படிப்பிக்க போற பிள்ளையள் சிங்களம் எண்டுரதால சிங்களத்தாலதான் விளங்க படுத்த வேனும் ok  seeyou  என விடை கொடுத்தார்

ஆம் என தலையாட்டி வெளியே வந்தேன். ஒரே ஒரு குழப்பத்துடன். சிங்களம் என் தாய் மொழி அல்ல ஆனால் என் ஊர் வாழ்த்த சமூகம் பழகிய  நண்பர்களின் பொருட்டால் சிங்களம் தெரியும் ஆனால் சிங்களத்தில் கற்பிக்க கூடியலவு இருக்குமா என்ற சந்தேகமே ... என்ன ஆனது அடுத்து அடுத்த தொடரில்

August 26, 2015

ஹைக்கூ நீ - குறும்படம்


சில்லென மலைச்சாரல் ஒரு மெல்லிய இசை ரஹ்மானோ இளையரஜவோ இசைக்க  ஒரு கதிரையில் நான் என் வலக்கரத்தில் தேனீர் எனது இடது தொடையின் மேல் என் காதலி அமர்ந்திருக்கிறாள் அவளது கூந்தல் நனைந்த வாசம் முகர்கிறேன் நான் :) ...... இந்த உணர்வு சில படங்கள் பார்க்கும் போது எனக்குள் தோன்றும்.

அலைபாயுதே, சில்லென ஒரு காதல், விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி இன்னும் இருக்கு போன்ற படங்கள் தந்தது  போன்ற ஒரு உணர்வை  ஹைக்கு குறும் படம் பார்த்த போது உணர்ந்தேன்.

3 நிமிசத்துல ஒரு கப் cofee  என்  காதலி குடிக்கனும்டு தோணிச்சு அந்த உதட்டுல  இருக்குற  கடைசி சொட்டு  எனக்குத்தாண்டு  தோணிச்ச. என் bedroom ல pillow fight நடக்கனும்டு தோணிச்சு அதுக்கப்புறம் romantic பன்னனும்டு தோணிச்சு

உண்மைதாங்க

“The best feeling is falling in Love The craziest experience is making love”

காதல் நிறைய தமிழ் சினிமாட கருப் பொருள்தான் ஆனால் அது சொல்லப் படும் விதத்தில் தான் அதன் அழகும் வெற்றியும் தங்கி உள்ளது. காத்திருத்தல் காதலில் நிறையவே சாத்தியமான ஒன்று அதுதான் ஹைக்கு நீ குறும் படத்தின் கருப் பொருள்.

waiter ரோடு சேர்த்து நான்கு கதப்பத்திரங்கள் அவர்களின் பங்கை நன்றாகவே செய்திருக்கின்றார்கள் காட்சிகள் அழகு.


சூர்யா நாராயணன் மற்றும் அவரது அணிக்கு வாழ்த்துகள் அருமையான படைப்பு நீங்கள் சினிமாவுக்குள் வந்து இது போன்ற முழு நீல படைப்புகளை வழங்க வேண்டுகிறோம்

குறும் படத்தை பார்வை இட


August 10, 2015

மெஹர் - விஜய் சித்திரம்


விஜய்  சித்திரம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதுமைகளை ஏற்படுத்திய புதிய நிகழ்ச்சிகளை படைத்த விஜய் தொலைக்காட்சியின் புதிய முயற்சி இதற்கான விளம்பரங்களும் முன்னோட்டங்களும் வரும் போதே எனக்குள் ஆர்வத்தை தூண்டி இருந்தது இந்த முன்னோட்டங்களை பார்த்ததும் என் முகப்புத்தகத்தில் இப்படி பதிவிட்டிருந்தேன்    “நீண்ட நாள் மனதில் இருந்த ஆசை .. ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும் போதும் அந்த அந்த காதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து பார்க்கும் நான் . நான் வாசிக்கும் புத்தகங்கள் காட்சியாக சினிமாவாக வர வேண்டும் என எதிர் பார்த்திருக்கிறேன் . அந்த ஆசை கனவு விஜயசித்திரம் எனும் vijay tv யின் நிகழ்ச்சி மூலம் நிறைவேற போகிறது என நினைக்கிறேன்


என் எதிர் பார்ப்பு வினாகவில்லை விஜய் சித்திரத்தின் முதலாவது படைப்பு மெஹர் இப்பொழுதும் சொல்கிறேன் நாவல் வாசித்தது போல ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மனதில் நிக்கிறது பசீர்,முதலாளி,ஜெஸ்மின்,காதர்,சின்னையா என எல்லாமே எதார்த்தமான நடிப்பு மொழி வழக்கு
சீதனம் பற்றி எவ்வலவோ பேசி இருக்கிறோம் போராடி இருக்கிறோம் உயிரின் ஆழம் தொட்டு சீதனம் சம்பந்தம்மாய் இஸ்லாம் சொன்னதை கோடிட்டு காட்டுகிறது இந்த மெஹர் இறுதி வார்த்தை உண்மையாக வேண்டும்இஸ்லாத்தை பின்பற்றி ஈமானோடு வாழ அடுத்த தலைமுறை தயாராக உள்ளது”

இஸ்லாமிய முறைப்படி ஒரு மனமகான் மணமகளுக்கு மஹர் எனும் அன்பளிப்பு கொடுத்து வலிமா எனும் மனவிருந்தும் கொடுத்துதான்  முடிக்க வேண்டும். அது போலவே மற்ற மதங்களும் கூறி இருக்கலாம் .
அதை விட்டு விட்டு தனது ஆண்மையை விற்கும் விபச்சாரிகள் போல் தனது படிப்புக்கும் தொழிலுக்கும் ஏற்ப சீதனம் நிர்ணயிப்பவர்களுக்கு இந்த மெஹர் ஒரு செருப்படி
இதில் இந்த சீதனம் மட்டும் அல்ல ஏழை பெண்களின் கனவு கஷ்டம் பேருக்காய் ஹாஜிகலாபவர்களின் உண்மை தன்மை நிறையவே . நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் நன்கு அறிவேன் கடன் வாங்குவதின் கடினம் மனிதத்தின் தன்மைகளை.


கிட்டத்தட்ட என் உம்மா இறையடி சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆக போகின்றது. இந்த பஷிரின் உம்மாவைப் போலத்தான் என் உம்மாவும் ஹராம் ஹலாளில் நிறைய பக்குவம் சொல்லி கொடுத்தார்கள். இன்று தலை நிமிர்ந்து வாழ சொல்லி கொடுத்து விடை பெற்றார்கள். நிறைய விதத்தில் இந்த மெஹர் என் மனதுக்கு பக்கத்தில் நின்கிறது இந்த படைப்பு நண்பர்கள் கட்டாயம் பார்க்கவும்


படைப்பை பார்க்க 


June 23, 2015

The Yellow Festival (மஞ்சள் நீராட்டு விழா) -குறும்படம்


குறும் படங்கள் திரை படங்களுக்கான அத்திவாரம் . திரை படத் துறையில் பயணிக்க விரும்புபவர்களின் முதல் அடி இந்த குறும்  படங்கள்  சில குறும் படங்கள் பின்னாட்களில் திரைப் படங்களாக மாறுகின்றது முண்டாசு பட்டி , பண்ணையாரும் பத்மினியும் , காதலில் சொதப்புவது எப்படி போன்று ஆனால் சில குறும்படங்களை பார்க்கும் போது ஒரு திரைப் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

அப்படி நான் அண்மையில் பார்த்து ரசித்த ஒரு குறும்படம்தான் The Yellow Festival (மஞ்சள் நீராட்டு விழா) இந்துக்களுடனான எனது நெருக்கம் அவர்களது கலை கலாச்சாரம் மரபு மீதான நிறைய அறிவைக் கொடுத்துள்ளது மஞ்சள் நீராட்டு என்பது .இந்த உலகத்தில் ஒரு குழந்தையா பிறந்து குறும்பு தனம் செய்து, சிறுமிய வளர்ந்து ஒரு பெண்ணா பரிமாணம் அடைகிற இந்த அற்புத தருணத்தை இந்து  கலாச்சாரம் அவர்களை  பக்குவப்படுத்தி அழகுபடுத்தி சீர் படுத்தி அவர்களுக்கு  குடுக்குற முதல் மரியாதை தான் இந்த மஞ்சள் நீராட்டு விழா!

ஒரு நவீனத்துக்கும் பாரம் பரியத்துக்குமான போராட்டம்தான் இந்த குறும்படம் இந்த வயது குழந்தைகள் நம்மை விட வளர்ந்து விட்டார்கள் நாம் பார்த்த உலகம் வேறு அவர்கள் பார்க்கும் உலகம் வேறு

மீனாட்சி இந்த கதையின் நாயகி குறும்புத்தனம் மிகுந்த சுட்டியான பெண் அவளது நடிப்பு இயல்பு அவளது அம்மா பெண்ணை பெற்றவளில் அதே பக்குவம் அவளது அப்பா யதார்த்தமானவர் பாட்டி அவரது அனுபவத்துடனான இயல்பு புத்தி குறைந்த பெண் புத்தி கொண்டே நடித்துள்ளார்
இந்த படத்தில் நான் ரசித்த விடயங்கள் நிறையவே இருக்கின்றது . நானும் ஒரு பெண்ணுக்கு அப்பாவாக வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது . அதற்கு முதலில் திருமணம் ஆஹ வேண்டுமே

படக்குழு விபரம்

Cast:

Bharathi Kannan as Viswanathan

Deepa Shankar as Gomathi

Neha Menon as Meenakshi

KR Rangamma as Grand Mother

Prema Priya as Aunty


Written & Directed by: Kamal Sethu

DOP: Imran Ahmedh KR

Music Director: Karthik Raja

Editor: B Lenin

Audiography: Tapas Nayak

Art Director: G Veera Mani

DI Colorist: Rajkumar K


 The Yellow Festival (மஞ்சள் நீராட்டு விழா) உணர்வுகளுடனான ஒரு குறும்படம்


இக்குறும் படத்தை ரசிக்க 

June 14, 2015

romeo juliet (2015)


romeo juliet படத்தின் posterகலை பார்க்கும் போதே ஒரு கிளு கிலுப்பை ஏற்படுத்தி இருந்ததது ஜெயம் ரவி, கண்சிகா வின் பிரதான நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.

ஏற்கனவே அடித்து துவைத்து எடுத்த கதையை வைத்து கொண்டு காதலர்களை பிரதான சக்தியாக கொண்டு ஒரு time pass  படத்தை வெற்றி கரமாக கொடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் லக்ஷ்மணன் இவர் S.J. சூர்யா எனும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனரிடம்  (நடிகர் இல்லை ) உதவியாளராக பணியாற்றியவர் அதுதான் poster ல் இருந்தே தனது சேட்டைகளை ஆரம்பித்து விட்டார். இசை D . இமான் டண்டனக்க வாக இருக்கிறது.

சரி படத்தின் கதை என்ன

ஹீரோ கார்த்திக் , ஒரு ஜிம் பயிற்சியாளர் . ஜாலியாக , பாஸிட்டிவாக இருப்பவர் . இவர் பணிபுரியும் ஜிம்மின் வாடிக்கையாளர்கள் பெரும்பணக்காரர்கள் என்பதால் இவருடன் அனோன்யம் . ஹீரோயின் சுப்புலட்சுமி , ஒரு அனாதை  . சிறுவயதுமுதலே மிடில்கிளாஸ் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார் . ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொண்டு தான் நினைத்தபடி வாழவேண்டும் என்பதே அவருடைய ஆசை . அப்போதுதான் பிரபலங்களுடன் இருக்கும் கார்த்திக்கைப் பார்த்து பணக்காரன் என்று நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறாள் ; அவனையும் காதலிக்க வைக்க முயற்சி்ககிறாள் . ஹீரோயினின் குறும்புத்தனங்களைப் பார்த்து ஒருகட்டத்தில் ஹீரோவும் காதலில் விழுந்துவிடுகிறார் . லவ் ஸ்டார்ட் . வழக்கம்போல ஊர் சுற்றல் , அன்பைப் பரிமாறல் என்று செல்லும் காதலில் , ஒருநாள் பிரிவு ஏற்படுகிறது . காரணம் தனியாக நான் வேறு சொல்லவேண்டுமா ? ஹீரோ பணக்காரர் இல்லை என்பது தெரிந்து ஹீரோயின் கழன்டுகொள்ள பார்க்கிறார் . ஹீரோவோ நீ தான் உலகம் என்று சொல்ல , அவரை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் . சிலமாதங்களுக்குப்பின் ஹீரோயினுக்கு ஒரு பெரும்பணக்காரருடன் நிச்சயதார்த்தம் ஆகிறது . ஹீரோ மீண்டும் அவளிடம் வந்து , தனக்கும் ஒரு பெண்ணை செட் செய்து தரவேண்டும் , இல்லையெனில் நாம்  காதலித்தது , கிஸ்ஸடித்தது எல்லாவற்றையும் ஆவனத்துடன் உன் வருங்கால கணவன் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டுகிறார் . அதன்பின் ஹீரோவுக்கு ஒரு பெண்ணை செய்துகொடுக்கிறாள் ஹீரோயின் . அதன்பின் நடந்ததையெல்லாம் சொன்னால் படமே முடிந்துவிடும் . அதனால் நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

தொழில் நுட்ப வளர்ச்சிகளாலும் சமூக வலைத்தளங்கள் மீதான மக்களின் அதிக நாட்டங்களினாலும் பல்வேறு விடயங்கள் பகிரப்பட்டு உற்று நோக்கப் பட்டு கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த இணைய உலகில் நானும் உலா வரும் வேளைகளில் பல்வேறு விடயங்களையும் விழியங்களையும்(Vedio)
காண்பது இயல்பு அதில் சில மனதில் நின்று விடுகின்றது அப்படி மனதில் நின்ற ஒரு விழியம் Romeo Juliet படத்தின் Climax  பார்க்கும் போது எனது ஞாபகத்துக்கு வந்தது  

அந்த விழியத்தை பார்க்க 



 Romeo Juliet டைம் பாஸ்சுக்கு சிறந்த படம்

படத்தின் முன்னோட்டதிட்கு 



Related Posts Plugin for WordPress, Blogger...