fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

May 13, 2012

அன்னை அன்பு


மனிதம் தொலைத்து
மானிடம் அலையுமென்று
ஆதி இறைவன்
அடிக்கணக்கு போட்டு வைத்தான்.
தொலைத்த மனிதம்
தோண்டி எடுப்பதற்காய்
அன்பின் வடிவில்
அன்னையை அனுப்பி வைத்தான்.
சோதனைக்களம்
கண்டு விளையாட
பிள்ளையும் பிறக்க வைத்தான்.
அன்னை அன்பு
உலகம் பரவ
மனிதன் கழகங்கள்
அமைத்து வைத்தான்.
தோல்வித் தண்ணீர்
முகத்தில் பட்டு
அன்னை அமைவிடமாய்
முதியோர் இல்லம்
மனிதன் அமைத்து வைத்தான் .

April 29, 2012

இட்லியாக இருங்கள்


தலைப்பே ஒரு மாதிரி அசத்துகிறது அல்லவா. அதனால்தான் அதன் ஆசிரியர் (சோம வள்ளியப்பன்) அதன் subtitle ஆக இது "சாப்பிடும் இட்லி அல்ல சாதிக்க வைக்கும் இட்லி " என்று நம் சிந்தனையை சாப்பாட்டு பக்கம் இருந்து திருப்புகிறார். திருப்பிய அவர் இந்த புத்தகத்தை சமர்ப்பணமாய் வாசகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனுக்கும் சமர்பிக்கிறார். ஆகவே நானும் சமர்பனத்தை ஏற்றுக்கொண்டு தாள்கள் புரட்டிப் பார்த்தேன்

அருமையான விடயம் இப்புத்தகம் வழியாக ஆராயப்படுகிறது Emotional Intelligence அதாவது உணர்வு பற்றிய புத்திசாலித்தனம் பற்றியதே இந்த புத்தகம் அதற்கே ஆசிரியர் இட்லி எனப்பெயர் வைக்கிறார்

முதலில் பிரபலங்கள் சிலரின் வாழ்க்கை சம்பவங்கள் சிலதை  நாம்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பின்பு மூளை அதன் பகுதி மனம் ,அறிவு அதன் செயற்பாடு .  உணர்ச்சி வேறு அறிவு வேறு என்பதாய் உதாரணங்களோடு தெளிவாய் உணர்த்துகிறார். அத்தோடு  Emotional Intelligence ஆக நாம் செய்ய வேண்டியது அதனால் நமக்கு கிடைக்கும் பலன் இப்படி அலசுகிறது
இந்த புத்தகம் இதில்  Emotional Intelligenc    குறித்து ஆசிரியர்  குறிப்பிடுவது
"தேடுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்க வேண்டும். அதுதான் முயற்சிக்கு மரியாதை அந்த மரியாதையை அனைவரும் பெறவேண்டும் அதற்கான ஒரு வலி Emotional Intelligence"

இந்த புத்தகம் வாசித்த பின்னர் சிறிதாய் ஒரு மாற்றம் பாதிப்பு எனக்குள்  தெரிந்தது ஒரு நல்ல புத்தகம் செய்ய வேண்டிய வேலையில் ஒன்றை இது செய்கிறது ஒன்றல்ல பலதை. இந்த புத்தகத்தின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன் இந்த புத்தகத்துக்கு பிறகு அவரது மற்ற புத்தகங்களையும் தேட வைக்கிறார்.

             உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இத்துறை பற்றி தமிழில் வேறு புத்தகங்கள் இல்லை. இந்த எளிய அறிமுக அதே நேரம் போதுமான செய்திகளை கொண்ட இப்புத்தகத்தை எழுதியதற்காக சோம.வள்ளியப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 புத்தகத்தின் பெயர் :-         இட்லியாக இருங்கள்
புத்தகத்தின் ஆசிரியர் :-   சோம. வள்ளியப்பன்.
பதிப்பகம் :-                          கிழக்கு ஒலிப்புத்தகம்
வகை :-                             சுய முன்னேற்றம்
தலைப்புக்கள் :-                  15
பக்கங்கள் :-                         140
இந்திய விலை :-                60 ரூபா
இலங்கை விலை :-           225 ரூபா

இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.

உங்கள் அபார வெற்றியின் வாசலை இப்புத்தகம் மூலம் திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன். '

April 22, 2012

பேதை மகள்



ஒழுகுற வீடு ஒன்டுதான்
எங்களோட சொத்து
பள்ளிக்குச்  சென்று படி
காகிதப்பூ தலையில சூடாத
மல்லிகை பூ நான் பாக்கன்
பெத்த மகளை அனுப்பி வச்சான்
சொத்தில்லா அந்த அப்பன்

நல்லாத்தான் படிச்சா அவள்
பாடத்தவிட அவன
அவன்ட கை பிடிச்ச போதையில
பள்ளிக்கூடம் தனை மறந்து
பாதையிலே திரிந்திருந்தாள் பேதை மகள்

ஆத்தி மகன் வேலைக்காய்
கொழும்புக்கு சென்றவன்
கூத்தி மக்கள் சகவாசம்
களித்து விளையாட தலை விட்டான்

கை பிடிச்ச தலை மகன்
கரம்பிடிக்க வாருவான் என்று
ஏங்கித் தவிக்கிறாள்
மடியில் நீர் துளிகள்
விட்டு ஓட்டை பார்க்கிறாள்
அதில் மாற்றம் இல்லை
மன ஓட்டை மட்டும் பெரிதானது
 
 

April 16, 2012

இதுவரை நான்


வாழ்கையில் நான் செய்யும் உருப்படியான காரியங்களில் ஒன்று இந்த வாசித்தல் பல்வேறு தருணங்களில் என் உணர்வுகளை புத்தியை தீட்டும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு. நல்ல புத்தகங்கள் நல்ல  நண்பன் என் தனிமைகான துணை நான் வாசித்து ரசித்த புத்தகங்களை உங்களுடன் பகிர்கிறேன் புத்தகக்கடையில் சேமிக்கிறேன்  

                                              இதுவரைநான்
எனது கவிஞனின் நூல் ஆம் கவிப்பேரரசு வைரமுத்துவை எனது கவிஞன்  என சொல்வதில் பெருமிதம் எனக்கு அவரது வரிகள், புத்தகங்கள் மீது தீரக் காதல் எனக்கு. என் கவிஞன் தன்னைப் பற்றி எழுதிய புததகமே இதுவரை நான்

தலைப்பை பற்றி இப்புத்தகத்தின் ஆசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார்
இதுவரைநான் எனும் இந்தப் படைப்பு சுயசரிதம் அன்று எனக்கு சுயம் உண்டே  தவிர சரிதம் கிடையாது 
எத்தனை  அடக்கமான பேச்சு இது உங்கள் தன்னடக்கம் வைரமுத்து ஐயா நீங்கள் எமக்கு என்றுமே சரிதம்தான்

இந்த புத்தகத்தில் கவிப்பேரரசு பிறப்பு தொடக்கம் அவரது முதல் பையன் பிறப்பு வரையிலான விடயங்களை  அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக தந்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் வாழ்கையின் எதார்த்தம் சொல்கிறது

இந்த புத்தகம் பற்றி கவிப்பேரரசு கடைசியாய் சொல்கிறார்
இது 
சுயம் தேடியலைந்த 
ஓர் இளைஞனின் சுயசரிதை 
எழுதப்பட்ட போது வயது இருபத்தியெட்டு    

இந்த புத்தகம்  வாசித்து முடித்த பின்பு என் மீதும் என் வாழ்வு மீதுமான நம்பிக்கையின் பெறுமதி இன்னும்  அதிகமானது

இதுவாரை நான் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்

March 24, 2012

காரணம் நீ தான்





தலை சாய்த்து
கண்ணயரும் பொழுதுகளில்
வரும் கணாக்கள்
அதில் நீ வந்தால்
கொள்ளை பிரியம் எனக்கு

அன்றொரு நாள்

செவ்வானச் சிதறல்களின்
கீழிருந்து
சில்லுகள் சேமிக்கிறேன்
காற்றலுத்தம் அதிகமாகி
சில்லுகள் சிதறின.

காலத்தை பற்றி இழுக்கிறேன்
அது எனை எட்டி உதைக்கிறது.

ரோஜா இதழ்கள் புசிக்கிறேன்
அதிலும் முட்கள் முளைகின்றன

நாட்கள் எண்ணி உறவுகள்
மனங்களுக்கு மதிப்பில்லை
ஊருக்காய் புன்னகை
உள்ளுக்குள் பூகம்பம்.

இவை ஏன் என் கணாக்களில்
நீ எனை விட்டு போகிறாயா?

நிஜங்கள் துறந்து
நிழல்களோடு நீ பயணிக்கிறாய்
உறவுக்காய் போகிறாயா?
போ

உனக்காய் ஓர் உறவு
உறவின்றி நிற்கிறது
எப்போதவது திரும்பி பார்
அப்போதும் என் கண்ணில்
விழுவது உன் விம்பமே

இப்போதும் சிரிக்கிறேன்
கணாக்களில்

காரணம் நீ தான்  

March 18, 2012

BE HAPPY


அப்பாடா பஸ் நிக்குது. ஒரு சிட்டும் இருந்துட்டா சந்தோஷம். ஒருவாறாய்
பஸ்ஸில் ஏறினான் கார்த்திக். பஸ்ஸின் பின்னால் ஒரு சீட் போய் அமர்ந்து கொண்டான்.  பக்கத்தில் ஒரு பெண் வயது  அவன் கணிப்பில் 25 -30 க்குள் இருக்க வேண்டும். ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தாள்  அப்பொழுது அவனது தொலைபேசி சினுங்கியது.

Hello


Hello மச்சான் Result வாந்துட்டுடா?


என்ன வந்துட்டா என்னடா Result என்ட result? 


மச்சான் நீ ஒரு பாடம் out 3A 2B நானும் தான்டா Don't worry be happyda 
Happy Journeyda

Ok மச்சான் Byeda 



ஆம் இன்று அவன் கல்லூரிக்கு சொல்லவில்லை. அடுத்த இரண்டு நாலும் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சொல்லவே இன்று புறப்பட்டான். அதற்குள் அவனது 2 nd semester Result இப்படி நண்பன் வாயிலாக கிடைத்தது. பரவாயில்லை முதலாவது referd தேத்தி கொண்டான்.

இப்பொழுது நிமிர்ந்து அருகிருந்தவள் முகம் பார்த்தான். அம்மங்கையின் முகத்தில் புன்னகை மறைந்திருந்தது. ஏதோ பிரச்சினை போல தென்பட்டால். இப்பொழுதும் தொலைபேசி சினுங்கியது. இம்முறை சினுங்கியது அவளது தொலைபேசி. அவள் கதைத்தது அவனுக்கு விளங்கவில்லை ஆனால் அவளது முகபாவங்களால் சில விடயங்களை சொல்லியது ஏதோ பிரச்சினை போல விளங்கியது.

இதட்கிடையில் ஒரு குழந்தையுடன் தாய் ஒருத்தி வந்ததால் அவனது சீட்டை அவன்  குடுத்துவிட்டு அவனது  பையை அம்மங்கையிடம் குடுத்து விட்டு எழுந்து நின்றான். எப்படியாவது அவளிடம் சொல்லிடனும் மனசுக்குள் நினைத்துக்கொண்டான்.
அப்பொழுது அவள் பேசினாள்   அவனிடம்

தம்புள்ளட்ட டிக்கட் எகாக் ( தம்புள்ளைக்கு டிக்கட் ஒன்டு )

பணத்தை  நீட்டினாள்

ம் அவள் சகோதர மொழி பெண். டிக்கட் வாங்கி கொடுத்தான் அவன். இருந்தாலும் பரவாயில்லை எப்படியாவது அவளிடம் சொல்லிவிடனும். நீண்ட நேரம்  முயட்ச்சிகிறான் இதற்குள் பஸ்ஸில் நெரிசல் வேறு.

அப்படி இப்படியாய் அவன் இறங்கும் இடம் வந்துவிட்டது. எப்புடியாவது சொல்லுவம் என்று மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனது பையை வாங்கியவனாக அவளை பார்த்து சொன்னான்

Don't Worry Sister Be Happy

அவள் அவனை பார்த்து சிறு புன்னகை வீசினாள்

March 05, 2012

உயிர்த் தோழியும் தோழனும்

ஒரு நண்பன் படும் துயரம் கண்டு . அவனது உயிர் தோழி. அவளது வாழ்வில் முதன்முறையாய் கவிதை நெய்கிறாள். அதுவும் அவளது தோழனுக்காய்

 வேதனை


எவ்வளவு கொடுமையானது
எவ்வளவு கஷ்டமானது
ஏன் உன்னை சேர்ந்தது
ஓ......... எனக்கு புரிந்து விட்டது
அந்த வேதனைக்கும்
உன்னை பிடித்து விட்டது போல
உன்னை பிடித்தவர்கள்
மனிதர்கள் மட்டும் தான் என நினைத்தேன்
ஆனால் இன்றுதான் தெரியும் இவற்றுக்கும் உன்னை பிடிக்கும் என்று.
உன் வேதனையில் முதன்மை வகிப்பது நான் தான் .
என்னால் உனக்கு எவ்வளவு கஷ்டம்
நான் உன் வாழ்வில் வந்திருக்காவிட்டால்
இவ்வளவு வேதனை உனக்கு வந்திருக்காது
ஆனாலுன் இதை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய் .
ஆனால் இது தான் உண்மை தோழா.


நான் அந்த இறைவனிடம் உனக்காக கேட்பது
உன் வேதனையில் அரைவாசியாவது எனக்கு தர வேண்டும் என்று ;

நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று கேட்பேன் செய்வாயா?
?
?
?
?
?
?
என்மேல் வைத்திருக்கும் அன்பை குறைத்து விடு,
அப்பொழுதாவது உன்னை சூழ்ந்திருக்கும் வேதனையில்
சிறிதளவாவது குறைந்து விடும் நண்பா
உன் நண்பிக்காக
உன் நண்பியின் திருப்திக்காக











  இக்கவியை வாசித்த தோழனோ அழவில்லை மாறாக சிரிக்கிறான். அவளுக்காய் அவனும் கவிதை வரைகிறான். இக்கவிதையில் உவமை இருக்காது உணர்வு இருக்கும்

வாக்கு 







என் உயிர் தோழியே !
வேதனை கொடியதுதான்.
அதை நான் இப்பொழுது நேசிக்கிறேன்.
எனக்காய் என் தோழி
வார்த்தை கோர்த்து
கவிதை நெய்தாள்.
அக்கவியின் ஒவ்வொரு வரியிலும்
அன்பை சொரிந்தாள்
நீ என் வேதனையா
யார் சொன்னது
வாய்மூடு  தோழி
வேதனையும் வேதனைப்படும்.
எனக்கும் உனக்கும் உள்ளது
அன்பு தூய்மை அன்பு
அதை எடை போட மாட்டேன் நான்
வாக்குத்தருகிறேன்
உன் மீதுள்ள அன்பை குறைகிறேன்
எப்போதனில்
என் விலா எழும்பு மக்கும் போது.


                                                                                          இது கற்பனையல்ல
                                                                              

February 27, 2012

சூரியச் சிறகு + பயம் + இப்பொழுது

சூரியச் சிறகு 

பேப்பர் துண்டுகாய்
மனிதத்தை தொலைத்து
இயற்கையின் கற்பை சீரழித்து
இறுதித் தருவாயில்
ஓய்வெடுக்க இதோ! உட்காரு
சூரியச் சிறகுகளில்














பயம் 

காதலின் மென்மைகளை
இலக்கியங்களில் படித்த நான்
பயந்து போனேன் 
காதலியோடு பேசி பேசி 
சூடகிப்போன 
நண்பனின் தொலைபேசி கண்டு 











இப்பொழுது 











ஓர் நினைவு 
இறப்பர் பலூனுக்காய் 
தந்தையோடு போராடி 
பெற்ற ஒரு ரூபாய் 
வழியில் தொலைந்தது 
காதலியின் பதிலால் 
இப்பொழுது 

February 23, 2012

நிலாக் கடல் ( இறகு 02 )



                   முகத்தில் பட்ட நீர் துளிகள். தடவிப் பார்க்கப்பட்ட போது கை நனைக்கப்பட்டது. கை நீட்டினால் கைக்கெட்டும் தூரம் வரை மழையில்லை. முகத்திலிருந்த நீர் துடைக்க காதலி நீட்டிய தாவணி முனைபோல் வந்தது தென்றல். மறுபடி கால் நனைப்பு. காலுக்கடியிலிருந்த மணர்த்துகல்கள் இடம் பெயர்கின்றன. உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு சொல்லி விட்டன. பவணி வந்தவளின் பல்லழகு எங்கும் பால் வெளிச்சம். அது யார் வரைந்த ஓவியம் அழிக்கப்பட்டுவிட்டது. முன் வந்தவனை பின் தள்ளி ஓடி வந்து அழித்து விட்டுச் சென்று விட்டான்.  யார் அது  இசை மீட்டுவது. பளிச்சென்று புகைப்படப்பிடிப்பு.தென்னோலைகள் நிலா வெளிச்சம் கடன் வாங்கி என்னை புகைப்படம் எடுத்தது. நான் நின்று கொண்டிருப்பது கடற்கரையில் அதுவும் பௌர்ணமிக்கடற்கரையில். 

                  எங்கும் நிசப்தம் இயற்கையின் சப்தம் மட்டும் சங்கீதம் பாடுகிறது. என்ன இசை இசை மைந்தர்கள் சங்கீதம்  திருடிய இடம் இது. மனது எண்ணம் வரையும் போதே ஆமோதித்து பாடல் பாடியது சில்லுரி. மூச்சுவிடாமல் நீண்டதொரு பாடல் ராகம் தாளம் தெரியாத என்னால் ஏதோ ஒரு ராகம் புரியப்பட்டது. ஆடம்பரமில்லா அடித்தளமாய் கடலின் விசாலம். விலாசம் இல்லாத பலபேருக்கு வாழ்வு கொடுகிறது. உறுதியாகிறது தூரத்தில் ஒரு தோணி கடல் தடவி பயணிக்கிறது. எத்தனை அதிஷ்டசாலி அந்த மீனவன்  இத்தனை அழகுக்குள்ளே அமைதியான அவனது வாழ்வு. நகர வாழ்வில் நசுங்கும் நாங்கள். எங்களின் காது வாகனசப்தங்களால் மறுத்து போய்விட்டன. எங்கள் மூச்சுக்களையும் பேச்சுகளையும் பார்வையையும் காசுக்காய் விற்று விட்டோம். 


                 ஏதோ தொலைத்து விட்டதாய் என் உள்ளம் உளரியது. உலகின் உள்ளங்கையில் எத்தனை அழகு. ஆம் இத்தனை நாளாய் ரசனையைத் தொலைத்து விட்டேன். இவ்வளவு நாளாய் எத்தனை இடங்களைத் தாண்டியிருப்பேன். அத்தனையையும் இந்த நவீனம் என்னிடமிருந்து பறித்து எடுத்ததாய் உணர்கிறேன். ஆழ் கடலின் அலைச் சப்தம் எனக்கு ஆறுதல் சொல்லியது. இது என் இடம் என்னைத்தவிர இங்கு வேறு மனிதரில்லை இங்கு நான் நானாய் இருக்கலாம். என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை நான் யாரையும் கட்டுப்படுத்த தேவையுமில்லை.


                 என் கால்கள் இரண்டும் முழந்தாலிட  கைகள் இரண்டும் மணல் தொட்டது . கடல் நீர் விரல் நனைக்க கடல் காற்று தலை தடவியது. மனதின் கணங்கள் இறக்கப் பட்டதாய் உணர்வு. என் வாழ்வில் வலி தொடும் வேளைகளில் இந்த கடல் தண்ணீரில் கண்ணீர் வடித்திருக்கலாமோ. அப்படி பலர் வந்து கண்ணீர் சிந்தியதாலோ உப்பு நீராகியது இந்நீர். என் நீரையும் உன்னோடு இப்போது சேர்த்துக் கொள். கண்ணீர் சிந்தினேன் வாழ்வில் முதன் முறையாய் நிம்மதியாய் கண்ணீர் சிந்தினேன். நிம்மதி இப்பொழுது நினைவுகள் மட்டும் மீதம் வலிகளை வடித்து விட்டேன்.


                அப்படியே என் முகங்களை கடற்கரை மணலில் புதைத்தேன். அதன் வாசனையை என் நாசி உணரப்படும் அளவுக்கு புதைத்தேன். அமைதியாய் மூச்சடக்கி முழுமையாய் மண்ணில் படுத்தேன். என் பக்கத்தில் யாருமில்லை நான் மண்ணோடு ஒன்றி விட்டேன். அந்த நிசப்த நிமிடங்கள் எனக்கு மரணத்து மணிகளை ஞாபகமூட்டின. இப்படித்தான் முடியப்போகிறது ஒரு நாள் என் வாழ்வு இல்லை இல்லை எல்லோருடைய வாழ்வும். எத்தனை யதார்த்தம். எனக்கு வேறு எந்த மணித்துளியும் இந்த மணித்துளியை உணர்த்தவில்லை. ஒரு இயற்கையை இன்னொரு இயற்கையால்தான் உணர்த்த முடியும் உணரவும் முடியும். 


                  எழுந்தேன். சப்தமிட்டேன் என்னால் முடியும் வேண்டிய மட்டும் சப்தமிட என் சப்தம் தடுக்க முடியாது யாராலும். வைரமுத்துவின் கவிதைபோல் நான் இங்கு ஊர் வாயை மூடத் தேவையுமில்லை என் செவிகளை மூடத் தேவையுமில்லை. எனக்கு இந்த அமைதி தந்தது சுதந்திரம் இன்று. இந்த கடல் சாட்சியாய் எத்தனை நாடகம் நடந்து முடிந்தது அன்று. துப்பாக்கி வேட்டுகளாய் எவ்வளவு குருதிகள் ஒன்றிவிட்டன கண்ணீரோடு. கடற்கரை ஓரத்து சிவப்பு உயிர் மீட்டியது அவர்களது நினைவுகளை. மணற்துகள்களாய் அவர்களது நினைவுகள் அழிக்கப்படும் போது. இந்த கடற்கரை மணற்துகள்கள் அதை சேமித்து வைத்திருக்கின்றன.


                  கடலைகளே செவிமெடுங்கள் கற்றே கேள்  என் கவிதைகளை உங்கள் முன் தூவுகிறேன். என் கவிஞனும் அப்படித்தான் தன் கவிகளை வயல் வெளிகளுக்கு ஒப்புவித்தான். நான் உங்களிடம். ஏனனில் அதை நான் உங்களிடமிருந்துதான் திருடினேன். காதலியிடமிருந்து திருடப்பட்ட அவளது இதயம் போல் எத்தனை முறை திருடினாலும் இனிக்கிறது.

February 14, 2012

யாசிக்கிறேன்

என் தோழியே
வாழப்பயப்படும் கோழை
நான் யாசிக்கிறேன்.
உணர்வுகள் இல்லா
உள்ளம் கொடு
கண்ணீர் சேமிக்கிறேன் .
பிரிவில்லா உறவு கொடு
வலிகள் சேமிக்கிறேன் .
கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன்.
நினைவுகள் மீட்டக்கொடு
நிஜங்களை மறுக்கிறேன்.
உண்மை  நட்பு கொடு
வாழ நினைக்கிறேன்.
இல்லையேல்
மரணம் கொடு
நிம்மதியாய் உறங்குகிறேன் 

February 13, 2012

எதிர்பார்ப்பு

அன்புள்ள அன்புக்கு
எத்தனை முறை எழுதிவிட்டேன்
அன்பு என்ற சொல்லும்
தேய்ந்ததாய்த் தெரிகிறது
ஆனால் உன் அன்புதான்
வளர்ந்ததாய்த் தெரியவில்லை
 
நான் ஏதேனும்
வார்த்தை பிழை விட்டேனோ ?
இலக்கணம் தவறினேனோ ?
எழுத்து எடாகுடமோ ?
எதுதான் நடந்ததோ ?
இத்தனையும் பேசிவிட்டு
மூச்சுவிட்டு நான் தரை பார்க்க
என் முகம் நீ பார்த்தாய்
 
தொண்டை குழி பதபதக்க
குரலில் சிறு தென்றல் நடுங்க
நீ சொன்னாய்
கடிதம் வரைந்தது நீதானா?
கொடுத்தது நீ இல்லையே
எழுத்து  பார்த்து
இலக்கணம் மதிப்பிட
நான் ஒன்றும் வாசகியல்ல
உன் அன்புக்காய் காத்திருந்த
காதலி
வார்த்தையில்  பார்வையில்
மூச்சில் மனதில்
அத்தனையிலும் எதிர்பார்த்தேன்
வர்ணனை எழுத்தில் மட்டுமல்ல
வாழும் காலம் வரை
" நான் உன்னை காதலிக்கிறேன்"

February 08, 2012

நான் (தம்பனுரான்)

பள்ளி பருவம் முடித்து பேனை தொட்ட தருணங்களில். பல முறை பிரசவமான பல்வேறு படைபுக்களை கண் பார்த்து காது கேட்டு உள்ளம் எங்கோ எனை மறந்து. மூச்சடக்கி முக்கி எழுந்த கணங்களிலும். பல நூறு நூற்களில் நான் பார்த்தவை வெறும் எழுத்துகளல்ல காலம் நீந்திக் கடந்தவர்களின் பிரசவமே காகிதப் பெண்களுடன் பேனாவின் ஊடலால் ஏற்பட்ட பிரசவமே அந்த பிரசவக் குஞ்சுகள் கழுகுகலாகிப் பறந்த தருணங்களில் கோழிக் குஞ்சாய் பல முறை பறக்க முட்பட்டிருகிறேன் இப்பொழுதும் முற்படுகிறேன். கோடிகாலம் காத்திருந்து தேடிப்பிடித்த மனைவியை கட்டியணைப்பது போல பற்றி பிடித்துக் கொண்டேன் பேனாவை. ஊடல் கொள்ளும் தேடல் தளமாய்  ஆக்கினேன் காகிதத்தை.
 தொலைந்து போன தோழியையும் தேடிப்பெற்ற நண்பர்களையும் மறந்து போன காதலையும் கடந்து போன பள்ளியையும் காத்து நிற்கும் காலத்தையும் மீட்டி ஓட்டி பார்க்க நினைக்கிறன் பேனாவின் தோலிலேறி இல்லை இல்லை பேனாவை என் தோலிலேற்றி. வலித்தாலும் என் பாதம் முன் வைக்க முயலுவேன் முடியாத கதைகலேன்று  மனது சொன்னவை முடிந்து விட்ட பதை என்று காலம் சொன்னவை இன்னும் எத்தனையோ மர்மதேச கதைகளாய் நீளும். நான் பேனா பிடித்து நடை பழகிய தருணங்களில் கை பிடித்து தூக்கிவிட்டவர் சிலரே " வேறு வேலை எதாவது செய் " என்று தூக்கி எறிந்தவர்கள் கணக்கில் அதிகம்.இன்னும் நான் பெரியவனாகவில்லை இலக்கிய பால் குடி மறவாத குழந்தையே .

February 07, 2012

எம் கணா ஒரு கணா

             "மனிதனாய் பிறந்திட்டால் ஏதாவது செய்திடனும் அதுவும் வித்தியாசமா செய்திடனும் " எப்புடிங்க பஞ்ச் dialog . இல்லைங்க உண்மைக்கும் மேலே சொன்ன மாதிரி ஏதாவது  வித்தியாசமா செய்யனும்டு நாங்களும் ஆசைப்பட்டோமுங்க . ஆசைப்பட்டதோட நிக்காம ஒண்டு செஞ்சமுங்க . என்னண்டா கேக்குறிங்க? அத சொல்லத்தானுங்க இந்த பதிவே .


        அதாங்க short flime ( குறுந்திரைப்படம் ) அதன இது ஒன்டும் புதிசில்லையே நீங்க கேக்குறது புரிது ஆனா எங்க ஊர்ல இது வித்தியசம்தானுங்க நாங்க அறிஞ்ச வரைக்கும் யாரும் எங்க ஊர்ல இப்புடி ஒரு முயற்சி எடுக்கலைங்க . அதுவும் இருந்ததே கொஞ்சம் போல வளம் தானுங்க . ஆ ஒன்டு சொல்லனும் இந்த படத்துக்கு ஒருத்தர் இருக்காருங்க உண்மைலே  இந்த கணா அவர்ரதானுங்க . அப்ப நீ என்ன செஞ்சண்டுதான கேக்குறிங்க  புரிது புரிது  அத நான் எப்புடிங்க சொல்லுவன் நீங்களே பாத்து கண்டுபிடிங்க.
 

     சரி இந்த பதிவின்ட முக்கியமான காரணமே இது எங்கட முதல் முயற்சி மக்களே பாராட்டாடியும் திட்டி தீர்த்தாவது உங்கட கருத்துகள எங்களுக்கு வாலங்குவிகண்டு நம்புறம் pls சும்மா பாத்துட்டு மட்டும்  போயிறாதிங்க. கூடிய  சீக்கிரம் எங்கட முயற்சிய கொண்டு வந்து சேர்போமுங்க. மிச்சத்த Diractor manazeer சொல்லுவருங்க

இறகு 1

குருவியிலிருந்து  முதன்முதலாய் விழுந்திருக்கிறது  இறகு ஒன்று
அதுவும் ஒரு நினைவு தாங்கியே விழுந்திருகிறது. நல்ல வேலை அது விழுந்த இடம் குருவிக்கூடு அதை நான் பத்திரப் படுத்துகிறேன்.

வந்த இருளும் நாளை விடியும் . கடந்த பள்ளி நாட்கள் மீண்டும் மீளா. அந்த இரவின் அடையாளமாய் இலையில் தங்கிய பனித்துளி போல் அதன் நினைவுகள் மட்டும் மனதில் ஒட்டி இருகின்றது . எனக்கு மட்டும் அல்ல பள்ளி பருவம் தாண்டிய அநேகருக்கு அதன் ஈரம்  இன்னும் இருக்கும் .

நிதானமாய் நிம்மதியாய் கண்மூடி. அந்த பழைய  பள்ளிக்கு போகின்றேன். வேப்பமரக்காத்து, அதன் ஒற்றை கந்தில் தொங்கும் ரயில் தண்டவாலத்து மிச்சம் எங்கள் பள்ளி மணி, அதோ எனது வகுப்பறை அப்படியே இருக்கிறது எனது மேசையும்  நட்காளியும் அதில் இன்னமும் இருக்க வேண்டும் எனது அடையாள குறியீடு . இதோ இங்குதான் நாங்கள் பாடத்தோடு வாழவும் கற்றோம். 

தோள் சாயத் தோழர்கள், தோள் தடவும் நண்பிகள், எனக்கேன்றே ஒரு பிறப்பு என் தோழன், என் முதல் ரசிகை என் தோழி, வழி வகுத்த ஆசான்கள் (வழி மறித்த ஆசான்களும் ), என்றுமே ருசியில்லா ஒரு வகை ருசியுடன் கேண்டின் சாப்பாடு , செம்மண் அள்ளி வீசும் மைதானம், பகல் நேர வகுப்புக்கு நிழல் தரும் மா மரம் , நான் தலைவனாய்  மார் தட்டிய மாணவர் மன்றம் ,.கடைசியாய் அவளை பார்த்த காலை கூட்டம் 

இன்னும் நினைவுக் கடலில் முடிவில்லாமல் நீந்த எத்தனையோ பசும் நினைவுகள் . குருவிக்கூட்டில் இறகு ஒன்றாய் சேமிக்கப்படுகிறது.

February 06, 2012

ஆசைபடுகிறேன்

 கால நகர்வில் மனிதன்  வேலைபலுவினால் தாம் மிகவும் விரும்பும் சில விடயங்களை செய்ய முடியாமல் போகலாம். அது போலவே எனது இந்த பதிவு எழுதுவதும் சில பல காரணங்களால் தூரமகியது மீண்டும் காதலர் மாதம்தனிலே எனது மீள் வருகையை புதுப்பித்து கொள்கிறேன்.

நான் நினைப்பதை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க இந்த பதிவுலகம் உள்ளதன எனக்கு உணரவைத்த ( நான் முதன்முதலாய் பார்த்த பதிவுத்தளமும் ) என் நண்பன் பவனுக்கு இந்த குருவிக்கூடு என்றும் நன்றி உரைக்கும் . இனி இந்த குருவி கொண்டு வரும் பதிவு எனும் சருகுகளால் . என் குருவிக்கூடு. கட்டப்படும் . நீங்களும் இக்குட்டில் அமர்ந்து உம் கருத்து சொல்லி செல்வீர் என இந்த உள்ளம் எதிர் பார்கிறது .

Related Posts Plugin for WordPress, Blogger...