fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

February 08, 2012

நான் (தம்பனுரான்)

பள்ளி பருவம் முடித்து பேனை தொட்ட தருணங்களில். பல முறை பிரசவமான பல்வேறு படைபுக்களை கண் பார்த்து காது கேட்டு உள்ளம் எங்கோ எனை மறந்து. மூச்சடக்கி முக்கி எழுந்த கணங்களிலும். பல நூறு நூற்களில் நான் பார்த்தவை வெறும் எழுத்துகளல்ல காலம் நீந்திக் கடந்தவர்களின் பிரசவமே காகிதப் பெண்களுடன் பேனாவின் ஊடலால் ஏற்பட்ட பிரசவமே அந்த பிரசவக் குஞ்சுகள் கழுகுகலாகிப் பறந்த தருணங்களில் கோழிக் குஞ்சாய் பல முறை பறக்க முட்பட்டிருகிறேன் இப்பொழுதும் முற்படுகிறேன். கோடிகாலம் காத்திருந்து தேடிப்பிடித்த மனைவியை கட்டியணைப்பது போல பற்றி பிடித்துக் கொண்டேன் பேனாவை. ஊடல் கொள்ளும் தேடல் தளமாய்  ஆக்கினேன் காகிதத்தை.

 தொலைந்து போன தோழியையும் தேடிப்பெற்ற நண்பர்களையும் மறந்து போன காதலையும் கடந்து போன பள்ளியையும் காத்து நிற்கும் காலத்தையும் மீட்டி ஓட்டி பார்க்க நினைக்கிறன் பேனாவின் தோலிலேறி இல்லை இல்லை பேனாவை என் தோலிலேற்றி. வலித்தாலும் என் பாதம் முன் வைக்க முயலுவேன் முடியாத கதைகலேன்று  மனது சொன்னவை முடிந்து விட்ட பதை என்று காலம் சொன்னவை இன்னும் எத்தனையோ மர்மதேச கதைகளாய் நீளும். நான் பேனா பிடித்து நடை பழகிய தருணங்களில் கை பிடித்து தூக்கிவிட்டவர் சிலரே " வேறு வேலை எதாவது செய் " என்று தூக்கி எறிந்தவர்கள் கணக்கில் அதிகம்.இன்னும் நான் பெரியவனாகவில்லை இலக்கிய பால் குடி மறவாத குழந்தையே .

10 comments:

Anonymous said...

நண்பனின் வரிகள் அசத்தல் .
நடை பயிலத்துடிக்கும் குழந்தைகளில் நானும்
இருக்கிறேன். ஒரு அடியை எடுத்து வைக்க என்னால் முடியவில்லை.
ஏன் முடியவில்லை என்பது விரைவில்

//தொலைந்து போன தோழியையும் தேடிப்பெற்ற நண்பர்களையும்
மறந்து போன காதலையும் கடந்து போன பள்ளியையும் காத்து நிற்கும்
காலத்தையும் மீட்டி ஓட்டி பார்க்க நினைக்கிறன் பேனாவின் தோலிலேறி
இல்லை இல்லை பேனாவை என் தோலிலேற்றி//

பிரமாதம் .

Anonymous said...

அசத்தலான வரிகள் அசர வைக்கின்றன.. தொடரட்டும் எழுத்துகள் என் வாழ்த்துகளுடன்..

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று தங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_13.html

விச்சு said...

வலைச்சரத்தில் தங்களின் அறிமுகம். நேரம் கிடைத்தால் கொஞ்சம் பாருங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_13.html

cheena (சீனா) said...

அன்பின் ஃபாஸினி முஹமது - எழுதுக் எழுதுக - வாசிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதுக - எட்டு மாதங்களாக எட்டு பதிவுகள் தானா - நிறைய எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ஃபாஸின் முஹமது

அசத்தலான வரிகள் அசர வைக்கின்றன.. தொடரட்டும் எழுத்துகள் என் வாழ்த்துகளுடன். நட்புடன் சீனா

fasnimohamad said...

//manazeer masoon said...

நண்பனின் வரிகள் அசத்தல் .
நடை பயிலத்துடிக்கும் குழந்தைகளில் நானும்
இருக்கிறேன். ஒரு அடியை எடுத்து வைக்க என்னால் முடியவில்லை.
ஏன் முடியவில்லை என்பது விரைவில்

//தொலைந்து போன தோழியையும் தேடிப்பெற்ற நண்பர்களையும்
மறந்து போன காதலையும் கடந்து போன பள்ளியையும் காத்து நிற்கும்
காலத்தையும் மீட்டி ஓட்டி பார்க்க நினைக்கிறன் பேனாவின் தோலிலேறி
இல்லை இல்லை பேனாவை என் தோலிலேற்றி//

பிரமாதம் .//

சீக்கிரம் சொல்லுங்கள்

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

fasnimohamad said...

//irfan zarook said...

அசத்தலான வரிகள் அசர வைக்கின்றன.. தொடரட்டும் எழுத்துகள் என் வாழ்த்துகளுடன்..//

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

fasnimohamad said...

// விச்சு said...

வலைச்சரத்தில் இன்று தங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_13.html //

என் பதிவுக்கு கிடைத்த முதலாவது அங்கீகாரம்

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும் அறிமுகத்துக்கும்

fasnimohamad said...

//cheena (சீனா) said...

அன்பின் ஃபாஸினி முஹமது - எழுதுக் எழுதுக - வாசிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதுக - எட்டு மாதங்களாக எட்டு பதிவுகள் தானா - நிறைய எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ஃபாஸின் முஹமது

அசத்தலான வரிகள் அசர வைக்கின்றன.. தொடரட்டும் எழுத்துகள் என் வாழ்த்துகளுடன். நட்புடன் சீனா//

சில வேலைகள் காரணமாக பதிவுகள் குறைந்தது இனி சரி ஆகும்

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...