fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

February 07, 2012

இறகு 1

குருவியிலிருந்து  முதன்முதலாய் விழுந்திருக்கிறது  இறகு ஒன்று
அதுவும் ஒரு நினைவு தாங்கியே விழுந்திருகிறது. நல்ல வேலை அது விழுந்த இடம் குருவிக்கூடு அதை நான் பத்திரப் படுத்துகிறேன்.

வந்த இருளும் நாளை விடியும் . கடந்த பள்ளி நாட்கள் மீண்டும் மீளா. அந்த இரவின் அடையாளமாய் இலையில் தங்கிய பனித்துளி போல் அதன் நினைவுகள் மட்டும் மனதில் ஒட்டி இருகின்றது . எனக்கு மட்டும் அல்ல பள்ளி பருவம் தாண்டிய அநேகருக்கு அதன் ஈரம்  இன்னும் இருக்கும் .

நிதானமாய் நிம்மதியாய் கண்மூடி. அந்த பழைய  பள்ளிக்கு போகின்றேன். வேப்பமரக்காத்து, அதன் ஒற்றை கந்தில் தொங்கும் ரயில் தண்டவாலத்து மிச்சம் எங்கள் பள்ளி மணி, அதோ எனது வகுப்பறை அப்படியே இருக்கிறது எனது மேசையும்  நட்காளியும் அதில் இன்னமும் இருக்க வேண்டும் எனது அடையாள குறியீடு . இதோ இங்குதான் நாங்கள் பாடத்தோடு வாழவும் கற்றோம். 

தோள் சாயத் தோழர்கள், தோள் தடவும் நண்பிகள், எனக்கேன்றே ஒரு பிறப்பு என் தோழன், என் முதல் ரசிகை என் தோழி, வழி வகுத்த ஆசான்கள் (வழி மறித்த ஆசான்களும் ), என்றுமே ருசியில்லா ஒரு வகை ருசியுடன் கேண்டின் சாப்பாடு , செம்மண் அள்ளி வீசும் மைதானம், பகல் நேர வகுப்புக்கு நிழல் தரும் மா மரம் , நான் தலைவனாய்  மார் தட்டிய மாணவர் மன்றம் ,.கடைசியாய் அவளை பார்த்த காலை கூட்டம் 

இன்னும் நினைவுக் கடலில் முடிவில்லாமல் நீந்த எத்தனையோ பசும் நினைவுகள் . குருவிக்கூட்டில் இறகு ஒன்றாய் சேமிக்கப்படுகிறது.

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஃபாஸி முஹமது - மலரும் நினைவுகள் - பள்ளி வாழ்க்கை மறக்க இயலாது. அசை போட்டு மகிழ்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

fasnimohamad said...

//cheena (சீனா) said...

அன்பின் ஃபாஸி முஹமது - மலரும் நினைவுகள் - பள்ளி வாழ்க்கை மறக்க இயலாது. அசை போட்டு மகிழ்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

என்றும் மாறா நினைவுகள்

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...