fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

March 25, 2015

நானும் எழுத்தும்


காலம் என்பது எவ்வளவு வேகமாக ஓடி விடுகிறது அது யாருக்காகவும் எப்போதும் காத்திருப்பதில்லை அதோடு சேர்ந்து எப்படியாவது ஓடி விட வேண்டும் என்பதுதான் நியதி வேகமாக ஓடுபவன் வெற்றி பெறுகிறான் காலத்தோடு ஓட முடியாதவன் வெற்றிக்காய் காத்திருக்க வேண்டி இருக்கிறது .

சரியாக ஓராண்டுக்கும் மேலானா காலத்துக்கு பிறகே எனது குருவிக்கூட்டின் பக்கம் வரக்கிடைத்திருக்கின்ரது.. இந்த இடைப் பட்ட காலம் எனக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்தது . நிறைய வலிகளை கொடுத்தது தொலைதூரம் கொண்டு வந்தது கண்ணீர், வலி ,பிரிவு ,சிரிப்பு ,அன்பு , காதல் ,தனிமை இவற்றை தன்னோடு கூட்டி வந்தது.

எங்கோ என் நாட்டை விட்டு தொலை தூரம் வந்து என்னை தேடுகிறேன். எழுத்தோடு இனைய வேண்டும் அந்த காதல் மீண்டும் வேண்டும் நான் நானாக இருக்க என் நினைவுகளின் வழியே பயணிக்க என் தனிமையை துணையாக்க


அதற்காக நேரத்தோடு சண்டை போட போகிறேன். இயந்திர வாழ்க்கைக்கும் இயற்கை கற்பனைக்கும் இடையில் பாலைவனத்தில் இருந்து என் குருவிக்கூட்டுக்கு இறை தேட போகிறேன் . ஏற்கனவே நான் ரசித்தவைகளை  நான்ரசித்தவை என்ற வலை தளத்தில் கோர்க்கிறேன் இனி குருவிக்கூட்டில் என் பதிவுகளுடனும்

September 02, 2013

தூக்கம்



அடுக்கு மாடி அடிவிழுந்த சோகத்தில்
மண்வீடோ மட்டற்ற மகிழ்ச்சியில்.

தூக்கம் தொலைத்து காசு காப்பதற்காய்
அமைதி தொலைத்து பஞ்சு மெத்தையில்
அல்லாடுது பணக்கார மனம்.

வேலை முடித்து களைப்பு துடைப்பதற்காய்
உலகம் மறந்து தூங்கி  கிடக்கிறது
தெரு வோரத்தில் ஏழை மனம்.

August 28, 2013

தூசு தட்டப்படும் பேனா

எந்தன் பேனாதான்.  இப்பொழுது தூசு தட்டப்படும் பொருளாகிவிட்டது. கால நாகர்வு வேலைப்பழு,எதிர்காலத்திட்டம் என எத்தனையோ காரணங்கள் நான் என் பேனாவை எழுத்துக்களை தொலைத்தட்கு கூறலாம். என் பாதையில் நிழல்கள் கிடைக்கவில்லை என்பதே  யதார்த்தம் கிடைத்த நிழலும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் உண்மை

கடந்த காலங்கள் எனக்கும் குருவிகூட்டுக்குமான உறவை தூரமாக்கி இருக்கலாம். ஆனால் பிரிவு என்ற ஒரு பொருளை மரணத்தால்தான் தர  முடியும் என்பது என் திண்ணமான எண்ணம்.

இந்த வருடம் நான் விரிவுரையாளராக (தகவல் தொழில்நுட்பம்) பொறுப்பேற்று நிறைய அனுபவங்கள் பெற்றது. பதியப்படாத நினைவுகள்.இனியேனும் காலம் தரும் நேரத்தில் எனக்கான நேரத்தைக்கண்டு இளைப்பாற நினைக்கிறேன். பேனாவோடு.

May 13, 2012

அன்னை அன்பு


மனிதம் தொலைத்து
மானிடம் அலையுமென்று
ஆதி இறைவன்
அடிக்கணக்கு போட்டு வைத்தான்.
தொலைத்த மனிதம்
தோண்டி எடுப்பதற்காய்
அன்பின் வடிவில்
அன்னையை அனுப்பி வைத்தான்.
சோதனைக்களம்
கண்டு விளையாட
பிள்ளையும் பிறக்க வைத்தான்.
அன்னை அன்பு
உலகம் பரவ
மனிதன் கழகங்கள்
அமைத்து வைத்தான்.
தோல்வித் தண்ணீர்
முகத்தில் பட்டு
அன்னை அமைவிடமாய்
முதியோர் இல்லம்
மனிதன் அமைத்து வைத்தான் .

April 29, 2012

இட்லியாக இருங்கள்


தலைப்பே ஒரு மாதிரி அசத்துகிறது அல்லவா. அதனால்தான் அதன் ஆசிரியர் (சோம வள்ளியப்பன்) அதன் subtitle ஆக இது "சாப்பிடும் இட்லி அல்ல சாதிக்க வைக்கும் இட்லி " என்று நம் சிந்தனையை சாப்பாட்டு பக்கம் இருந்து திருப்புகிறார். திருப்பிய அவர் இந்த புத்தகத்தை சமர்ப்பணமாய் வாசகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனுக்கும் சமர்பிக்கிறார். ஆகவே நானும் சமர்பனத்தை ஏற்றுக்கொண்டு தாள்கள் புரட்டிப் பார்த்தேன்

அருமையான விடயம் இப்புத்தகம் வழியாக ஆராயப்படுகிறது Emotional Intelligence அதாவது உணர்வு பற்றிய புத்திசாலித்தனம் பற்றியதே இந்த புத்தகம் அதற்கே ஆசிரியர் இட்லி எனப்பெயர் வைக்கிறார்

முதலில் பிரபலங்கள் சிலரின் வாழ்க்கை சம்பவங்கள் சிலதை  நாம்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பின்பு மூளை அதன் பகுதி மனம் ,அறிவு அதன் செயற்பாடு .  உணர்ச்சி வேறு அறிவு வேறு என்பதாய் உதாரணங்களோடு தெளிவாய் உணர்த்துகிறார். அத்தோடு  Emotional Intelligence ஆக நாம் செய்ய வேண்டியது அதனால் நமக்கு கிடைக்கும் பலன் இப்படி அலசுகிறது
இந்த புத்தகம் இதில்  Emotional Intelligenc    குறித்து ஆசிரியர்  குறிப்பிடுவது
"தேடுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்க வேண்டும். அதுதான் முயற்சிக்கு மரியாதை அந்த மரியாதையை அனைவரும் பெறவேண்டும் அதற்கான ஒரு வலி Emotional Intelligence"

இந்த புத்தகம் வாசித்த பின்னர் சிறிதாய் ஒரு மாற்றம் பாதிப்பு எனக்குள்  தெரிந்தது ஒரு நல்ல புத்தகம் செய்ய வேண்டிய வேலையில் ஒன்றை இது செய்கிறது ஒன்றல்ல பலதை. இந்த புத்தகத்தின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன் இந்த புத்தகத்துக்கு பிறகு அவரது மற்ற புத்தகங்களையும் தேட வைக்கிறார்.

             உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இத்துறை பற்றி தமிழில் வேறு புத்தகங்கள் இல்லை. இந்த எளிய அறிமுக அதே நேரம் போதுமான செய்திகளை கொண்ட இப்புத்தகத்தை எழுதியதற்காக சோம.வள்ளியப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 புத்தகத்தின் பெயர் :-         இட்லியாக இருங்கள்
புத்தகத்தின் ஆசிரியர் :-   சோம. வள்ளியப்பன்.
பதிப்பகம் :-                          கிழக்கு ஒலிப்புத்தகம்
வகை :-                             சுய முன்னேற்றம்
தலைப்புக்கள் :-                  15
பக்கங்கள் :-                         140
இந்திய விலை :-                60 ரூபா
இலங்கை விலை :-           225 ரூபா

இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.

உங்கள் அபார வெற்றியின் வாசலை இப்புத்தகம் மூலம் திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன். '

April 22, 2012

பேதை மகள்



ஒழுகுற வீடு ஒன்டுதான்
எங்களோட சொத்து
பள்ளிக்குச்  சென்று படி
காகிதப்பூ தலையில சூடாத
மல்லிகை பூ நான் பாக்கன்
பெத்த மகளை அனுப்பி வச்சான்
சொத்தில்லா அந்த அப்பன்

நல்லாத்தான் படிச்சா அவள்
பாடத்தவிட அவன
அவன்ட கை பிடிச்ச போதையில
பள்ளிக்கூடம் தனை மறந்து
பாதையிலே திரிந்திருந்தாள் பேதை மகள்

ஆத்தி மகன் வேலைக்காய்
கொழும்புக்கு சென்றவன்
கூத்தி மக்கள் சகவாசம்
களித்து விளையாட தலை விட்டான்

கை பிடிச்ச தலை மகன்
கரம்பிடிக்க வாருவான் என்று
ஏங்கித் தவிக்கிறாள்
மடியில் நீர் துளிகள்
விட்டு ஓட்டை பார்க்கிறாள்
அதில் மாற்றம் இல்லை
மன ஓட்டை மட்டும் பெரிதானது
 
 

April 16, 2012

இதுவரை நான்


வாழ்கையில் நான் செய்யும் உருப்படியான காரியங்களில் ஒன்று இந்த வாசித்தல் பல்வேறு தருணங்களில் என் உணர்வுகளை புத்தியை தீட்டும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு. நல்ல புத்தகங்கள் நல்ல  நண்பன் என் தனிமைகான துணை நான் வாசித்து ரசித்த புத்தகங்களை உங்களுடன் பகிர்கிறேன் புத்தகக்கடையில் சேமிக்கிறேன்  

                                              இதுவரைநான்
எனது கவிஞனின் நூல் ஆம் கவிப்பேரரசு வைரமுத்துவை எனது கவிஞன்  என சொல்வதில் பெருமிதம் எனக்கு அவரது வரிகள், புத்தகங்கள் மீது தீரக் காதல் எனக்கு. என் கவிஞன் தன்னைப் பற்றி எழுதிய புததகமே இதுவரை நான்

தலைப்பை பற்றி இப்புத்தகத்தின் ஆசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார்
இதுவரைநான் எனும் இந்தப் படைப்பு சுயசரிதம் அன்று எனக்கு சுயம் உண்டே  தவிர சரிதம் கிடையாது 
எத்தனை  அடக்கமான பேச்சு இது உங்கள் தன்னடக்கம் வைரமுத்து ஐயா நீங்கள் எமக்கு என்றுமே சரிதம்தான்

இந்த புத்தகத்தில் கவிப்பேரரசு பிறப்பு தொடக்கம் அவரது முதல் பையன் பிறப்பு வரையிலான விடயங்களை  அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக தந்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் வாழ்கையின் எதார்த்தம் சொல்கிறது

இந்த புத்தகம் பற்றி கவிப்பேரரசு கடைசியாய் சொல்கிறார்
இது 
சுயம் தேடியலைந்த 
ஓர் இளைஞனின் சுயசரிதை 
எழுதப்பட்ட போது வயது இருபத்தியெட்டு    

இந்த புத்தகம்  வாசித்து முடித்த பின்பு என் மீதும் என் வாழ்வு மீதுமான நம்பிக்கையின் பெறுமதி இன்னும்  அதிகமானது

இதுவாரை நான் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்

Related Posts Plugin for WordPress, Blogger...