fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

June 09, 2015

காக்கா முட்டை (2015)


காக்கா முட்டை யதார்த்தங்கள் நிறைய சொல்லும் அமைதியான நதி. அதுவும் அடிமட்ட வாழ்கையின் யதார்த்தங்கள் நிறையவே சொல்கின்றது.எந்த ஒரு பெரிய நட்சதிறமும்  இல்லாமலே படம் வர முன்னரே என்னை போலவே பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய ஒரு படம் . இன்னும் ஒரு தமிழ் படம் என்னை ஈரான் படச் சாயலுக்கு அழைத்து செல்கிறது . இதே உணர்வை ஆதலால் காதல் செய்வீர்  ஏற்கனவே ஏற்படுத்தி இருந்தது

இந்த திரைப் படத்தில் ஏற்கனவே நான் சொன்னது போல நிறைய யதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றது. ஒரு அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே கஷ்டப்படும் இரு சிறுவர்கள் pizza தின்ன ஆசைப் பட்டு அதை திண்டார்களா இல்லையா என்பதுதான் கதை. முதலில் தனுஷ் கும் வெற்றி மாறனுக்கும் பெரிய நன்றிகள் இப்படி ஒரு படத்தை நம்பிக்கையை மட்டும் வைத்து கொண்டு தயாரிக்க முன் வந்தமைக்கு . ஒளிப்பதிவாளறாய் இருந்த மணிகண்டன் இயக்குனராகி இருக்கிறார் தானது ஒளிப்பதிவு வாழ்க்கையிலும் குறும்படங்களிலும் பெற்ற அனுபவத்தை காக்கா முட்டையில் சிறப்பாகவே காட்டி இருக்கிறார்

பெரிய காக்கா முட்டை விக்னேசும் சின்ன காக்கா முட்டை ரமேசும் படத்தின் கதாநாயகர்கள் அவர்கள் அந்த பாத்திரங்களாக நடிக்க வில்லை வாழ்ந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா மானாட மயிலாட அவரது ஆரம்பம் அதன் பின் நாலைந்து படம் நடிச்சாலும் அட்டக் கத்தி, ரம்மி ,பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் அவரது நடிப்பை ரசித்திருக்கிறேன் இந்த படத்தில் காதலிக்கிறேன் . பழரசம் , அந்த பாட்டி என சின்ன சின்ன பாத்திரங்களும் மனதில் நிற்கிறது. G.V  பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் அருமை

சிம்பு இந்த படத்துக்கு சிறப்பு தோற்றத்துக்கு வந்து நான் இன்னும் உயிரோடதான் இருக்கன் என உயிரோட்டமாய் நிருபித்திருக்கிறார். கிஷோர் பற்றி சொல்ல ஏதுமே இல்லை தேசிய விருது பெற்றவராகிட்டே வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி ஒட்ட வேண்டிய இடத்தின் ஒட்டி காக்கா முட்டையை முழுமையாய் கொடுத்திருக்கிறார்.
நவநாகரிகம் அடுத்த கட்டம் என நாங்கள் எங்கோ சென்று கொண்டிருந்தாலும் நிறைய விடயங்களை பொய்யாகவே ரசித்து ருசித்து கொண்டிருக்கிறோம் 500 ரூபாய்க்கு வாங்கும் french fries ஐ விட 50 ரூபாய்க்கு வாங்கும் மரவள்ளி கிழக்கு தான் ருசி என்பதே யதார்த்தம்

காக்கா முட்டை கட்டாயம் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் . சினிமா காதலர்கள் பலமுறை பார்க்க வேண்டும் ரசிக்க கற்க நிறையவே இருக்கின்றது

படத்தின் முன்னோட்டத்துக்கு 






0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...