fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

June 13, 2015

15D குறும்படம் ஒரு பார்வை



“ஒரு நீண்ட கால தவம் , தேடல்கள் , காத்திருப்பு இத்தனையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன் நிறையவே நண்பனாய் ,ரசிகனாய். உன் படைப்பு வெளி வர இத்தனை காலம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது . உன் உழைப்பு சத்தமே இல்லாமல் சத்தமாய் ஒரு கதை சொல்லி விட்டது 15D இது ஒரு ஈழத்தில் பிறந்த கலைஞனின் படைப்பு . எங்கே சென்றாலும் கனவை நனவாக்க கற்று கொண்டவனின் ஆளுமை”

இது என் நண்பனின் குறும் படம் வந்தவுடன் என் முகப்புத்தகத்தில் எழுதியது இது பற்றி விரிவாக வலைத்தளத்தில் எழுத இத்தனை நாளாகி விட்டது வேலைப் பழு இத்தனை நாளாய் இழுத்தடித்து விட்டது . அது போலத்தான் இவனது படைப்பும் வர இத்தனை வருடமாகிவிட்டது.

மூன்று வருடங்களுக்கு முதலே நாங்கள் வாடகைக்கு Camera வாங்கி படம் எடுக்க ஆரம்பித்தோம் ( இது பற்றிய ஒரு பதிவும் இந்த வலைத்தளத்தில் "எம் கணா ஒரு கணா" என்ற தலைப்பில் உள்ளது ") நான் மட்டும் நடிக்க ஒளிப்பதிவு முதல் இயக்கம் வரை செய்தவர்தான் இந்த MANAZEER MASOON கடைசில் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ஒரு கணா தவிர்கமுடியாத காரணங்களால் கனவாகியே போனது.


அதன் பின் அவன் தொழில் விடயகமாகவும் நான் கல்வி விடயமாகவும் வெவ்வேறாக பிரிந்து விட்டோம். நாங்கள் ஒன்றாய் இருந்த காலங்களிலும் இப்போதும் நாங்கள் பேசும் தலைப்புக்களில் பெரும்பான்மையாக இடம் பெறுவது சினிமாவும் இலக்கியமுமே . நல்ல சில சினிமாக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவன் சில விடயங்களை உன்னிப்பாகவும் வித்தியாசமாகவும் ரசிக்க கூடியவன் அவனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் அவனது முதலாவது குறும் படமே 15D.

இவர்  விரல்கள் , மாட்டு வண்டி போன்ற பதிவு பக்கங்களை நடத்தி வாந்தி பின் நாட்களில் காணாமல் போனது . ஏன் என்றால் வாசிப்பு நாட்டம் இல்லாத எனது நண்பன் ஒருவன் இவர் எழுதிய பயணக் கட்டுரை பற்றி பேசிய போது ஆச்சர்யப் பட்டுத்தான் போனேன். மீண்டும் இவர் பதிவுலகத்துக்கு வர வேண்டும் என்பதும் என் அவா .

தற்போது  DUBAI ல் தொழில் புரியும் அவன் அங்கே உருவாக்கிய நட்பு வட்டத்துடன் இணைந்து படைத்திருக்கிற படைப்பு . வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு புரியும் நேரத்தின் அருமை இங்கு நேரம் கிடைப்பதும் குறைவு கிடைத்தாலும் தூக்கத்திலேயே பெரும்பாலும் கழியும் . அப்படி கிடைத்த நேரத்தை சரியாய் சேமித்து வந்ததுதான் இந்த படைப்பு. 

Ambal Studio Productio தயாரிப்பில் வெளி வந்திருக்கும் இந்த படம் சத்தமே இல்லாமல் சத்தம் போடுகிறது  Manazeer Masoon ன் இயக்கத்தில் முதல் படம் என்பதால் சில குறைகளோடும் நிறைய நிறைகளோடும் வந்திருக்கிறது . இந்த படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவுதான் தனக்கு கொடுக்க பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் Rince c.James சில நிறைய இடங்களில் camera பேசுகிறது ஒரு பிரதான கதா பாத்திரம் சில சிறிய கதா பாத்திரம் என அருமையாய் நகர்கிறது கதை பிரதான கதாப்பாத்திரத்தின் நடிப்பு இயல்பாக இருக்கிறது . அத்துடன் வெட்டுதல் ஒட்டுதல் வேலைகளை இயக்குனரே பார்த்திருக்கிறார்.

ஒரு முறை பார்த்தல் சாதாரண ரசிகனால் புரிந்து கொள்ள முடியாமல் படம் நகர்வதுதான் சிறிய குறை தொழில்நுட்ப ரீதியாக அருமையாய் இருக்கிறது


15D சத்தமில்லாமல் எடுத்து வைத்த முதல் அடி

குறும் படத்தை பார்க்க 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...