fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

August 02, 2016

விடையில்லா குழப்பம்


உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும் 
விடு பட நினைக்கையில்
காதலிக்க தொடங்குகிறோம்
வன்முறைகளுக்கு அப்பால்
வாழ்ந்து பாப்போம் வா
ஒன்றோடு இரண்டாக
மூன்றை சேர்த்தது நீதானே
இருள் மேகங்கள்
தெளித்து விட்ட
குழப்பத்தில் துளிகளை
என்மீது
விசிறி எறிந்தவள் நீதானே
என் உள்ளத்தில்
உறைந்து விட்ட
வலி தாங்க நினைவுகளோடு
உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும்
விடு பட நினைக்கையில்
காதலிக்க தொடங்குகிறோம்

November 07, 2015

அனுசாந் நான் கவிதை


கவிதை மீதான காதல் என்னில் எப்போது பிறந்தது நான் இன்னும் தேடி விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. பொதுவாகவே வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் பூஜ்ஜியத்தால் பெருக்கப் பட்ட சூன்யங்கள். எத்தனை கவிஞ்சர்கள் எத்தனை கவிதைகள் தேடி பொறுக்கி படித்தும் இன்னும் அந்த ரசனையும் தாகமும் அடங்கியதாக இல்லை.

கவிதைகள் வாசிப்பது ஒரு ரசனை என்றால் கவிதைகளை பிரசவித்த கவிஞன் வாசிக்க கேட்பது இன்னுமொரு ரசனை. காரணம் அதை பிரசவித்தவனுக்கே வாசிப்பவனை விட அந்த கவிதையின் மொழியும் அதன் உணர்வுகளும் நன்கு தெரியும். அவனது விரல்கள் பிரசவித்ததை அவனது குரல்களால் அனைத்தெடுக்க முடியும். எத்தனையோ கவிதைகள் வாசிக்க கேட்டு அழுது இருக்கிறேன் சிரித்து இருக்கிறேன் கோபப் பட்டு இருக்கிறேன்.

இந்த கவிதைகளை ஒலி வடிவாக கேட்பதோடு ஒரு மெல்லிய இசை தழுவிச் சென்றால் கண்களில் அந்த கவிதை வரிகள் தோன்றினால் அது எங்கோ எமை கூட்டிச் சென்று விடும். அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்குவது போல . காதலியில் தாவணியில் தலை துவட்டுவது போல. தந்தையிடம் திட்டு வாங்குவது போல சுகமான உணர்வு

இப்படியான  கவிதைகள் ஜாபிர் அவர்களால் ஆரம்ப காலங்களில் இலங்கை தொலைக்கட்சிகளில் தொகுத்து வழங்கப் பட்ட நிகழ்சிகளில் இடம் பெரும் பல நாட்கள் தவம் இருந்து பாத்திருக்கிறேன் பெரும் பாலும் அதில் மொழி பெயர்ப்பு கவிதைகள் தான் இடம் பெரும் இப்படி ஒரு கவிதை தொகுப்பு இருவெட்டாய் வெளி இட வேண்டும் என்பது எண்ணமாக இருந்தது

அப்படி ஒரு தொகுப்பு என் நண்பரால் வெளி வந்தது. என் கனவு இன்னொரு கண்களிலும் தோன்றி இருக்கிறது அது பிரசவமாகி விட்டது. ஆம் நண்பர் அனுசாந்தின் தலைப் பிரசவம்தான் அது அதுவே எங்களை நண்பர்களாக்கியது. ஆனால் ஒரு சிறு கவலை நான் 4 வருடங்கள் திருமலையின் கழித்திருக்கிறேன் ஆனால் அவர் அறிமுக மானதோ நான் இலங்கையை விட்டு வந்த பின்னரே. முன்பே அறிமுகமாகி இருந்தால் இனிய கவிதை பொழுதுகள் அவரோடு கழிந்திருக்கும்.




//வாசிப்பு எங்களிடம் மங்கிப்போன ஒன்று இதனால் நல்ல கவிதைகளையும் தவர விடுகிறோம் . நண்பர் Anushanth Sajeethaஇதற்காகவே தலைப் பிரசவத்தை ஒலி ஒளி வடிவில் தந்திருக்கிறார் ..... கவிதைகளைச் சுமந்த கவிஞன் தலைப் பிரசவமாய் பிரசவித்துள்ளான்//இது நண்பரின் கவிதை தொகுப்பை பார்த்ததும் என் முகப் புத்தகத்தில் குறித்துக் கொண்டது

அனுசாந்தின் தலைப் பிரசவம் ... இது அவர் பிரசவித்த கவிதைகளுக்கு தந்தையாய் வைத்த பெயர் அழகிய பிரசவம் ரசிகனாய் நான் வைக்கும் பெயர் .. தமிழ் மிதான அவரது காதல் அவரது காதலி மிதான அவரது காதல் வார்த்தைகாளாய் பிரசவமாகி உள்ளது. இந்த பதிவு எழுதும் இந்த நொடி வரை ஒரு மனவர்த்தம் உள்ளது இன்னும் அவரது தொகுப்பை முழுமையாய் கேட்டு முடிக்க வில்லை ஆனால் கவிஞரோ அடுத்த படைப்புக்கு தயாராகி விட்டார் 

ஒரு கவிஞன்
உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்
                                  வைரமுத்து 


அவரது கவிதைகள் பற்றி நான் விரிவாய் இங்கு அலசவில்லை காரணம் அது அலசப் பட வேண்டியதல்ல ரசிக்கப் பட வேண்டியது ... வாழ்த்துகள் நண்பா கலைப் பயணம் தொடர

அவரது சில கவிதைத் தடங்களை முகப் புத்தகத்தில் பார்க்கலாம் 
https://www.facebook.com/anushanth.anushanth

September 01, 2015

நானும் விரிவுரையாலறாய் - 1



ஒரு தொழிலை நாம் விட்டு வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான் இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள் அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான் என எண்ணத் தோன்றுகிறது.

நான் எனது தகவல் தொழில் நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது. அதற்காக எனது நண்பர்கள் எல்லாம் அரச காரியாலயங்களை தெரிவு செய்ய .நானும் சொந்த ஊருக்கு (polonnaruwa)  திரும்பி இருந்தேன் அரச காரியாலயங்களில் இடம் தேட.
அந்த நேரத்தில் எனது சிரேஷ்ட (senior ) சகோதரியிடம் இருந்து வந்த அழைப்பின் பெயரால் மீண்டும் நான் கல்லூரில் கல்வி கற்ற திருகோணாமலை நகரத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கியமான தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Esoft Metro Campus நிறுவனத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு சென்றேன். இந்த இடத்தில்  ஒரு விடயம் ஞாபகப் படுத்தப் பட வேண்டும் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்ததால் Esoft ,ICBT ,BCAS ,IBS  போன்ற நிறுவனங்களில் கற்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்தது இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்த நிறுவனங்களில் ஏதும் எமது மாவட்டத்தில் அந்த நேரத்தில் காணப் படவில்லை ஆகவே வெளியூர் சென்றுதான் கற்க வேண்டும் அதற்கான செலவுகள் அதிகமாக கணப் பட்டமை இரண்டாவது இந்த மாதிரியான தனியார் நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என எண்ணியமை ( அது இல்லையென பின்னாட்களில் புரிந்தது)

இப்படி நாம் படிக்கவே முடியாது என எண்ணிய இடத்தில் விரிவுரையாளருக்கான நேர்முக பரீட்சைக்கு வந்திருப்பது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நேர்முகப் பரீட்சைக்கு நேராக சொந்த ஊரில் இருந்து வந்து இரங்கி  திருகோணமலையின் மத்திய பஸ்தரிப்பிடத்துக்கு எதிரில் அமைந்து உள்ள NSB BUILDING என அழைக்க பட்ட கட்டிடத்தில் இரண்டாவது மாடிக்கு ஏறினேன். நிறையவே தைரியம் இருந்தது காரணம் அதற்கு முதல் நாளே எனது சிரேஷ்ட மாணவியிடம் call  பண்ணி ஆயிரம்  கேள்விகள் கேட்டாகி விட்டது ஏன் என்றால் அவரும் அங்கேதான் வேலை பார்க்கிறார்.

கண்ணாடி கதவு திறந்து உள் நுழைந்ததும் வாரவேட்பரையில் ஒரு பெண் good morning என்றார் பதிலுக்கு நானும் good morning சொல்ல . sir நீங்க interview குதனே வந்து இருக்கிங்க உள்ள போங்க இதான் manager room என எதிரில் இருந்த room ஐ காட்டினால். கதவைத்திறந்து உள்ளே நுழைந்தேன்  youtube ,google அனைத்திலும் தேடிய How to face interview மனதிற்குள்ளே ஓடியது இதுதான் நான் தகவல் தொழில் நுட்பம் கற்ற பின்பு சந்திக்க போகும் முதலாவது நேர்முகப் பரீட்சை.

Excuse me may i coming என்ற வாசகத்துடன் உள் நுழைய Yes, Coming என்று வரவேற்றார் அன் நிறுவனத்தின் முகாமையாளர் Dewananth Kumarakurunathan . நீங்கதான fasni    cv தாங்க பாப்பம் என தமிழிலே ஆரம்பித்தது புது தெம்பை எனக்கு வழங்கியது பின்னர் சில கேள்வி விடை என நேர்முகப் பரீட்ச்சை இறுதியாய் சொன்னார் எல்லாம் ok  நாளைக்கு வந்து class ஒன்டு எடுங்கோ மாணவர்களில் feedback ஐயும் நீங்க எப்படி class எடுக்கிறிங்க என்டுரத்தையும் பொறுத்தே Result . எல்லா Class உம் English லதான் ஆனா நீங்க படிப்பிக்க போற பிள்ளையள் சிங்களம் எண்டுரதால சிங்களத்தாலதான் விளங்க படுத்த வேனும் ok  seeyou  என விடை கொடுத்தார்

ஆம் என தலையாட்டி வெளியே வந்தேன். ஒரே ஒரு குழப்பத்துடன். சிங்களம் என் தாய் மொழி அல்ல ஆனால் என் ஊர் வாழ்த்த சமூகம் பழகிய  நண்பர்களின் பொருட்டால் சிங்களம் தெரியும் ஆனால் சிங்களத்தில் கற்பிக்க கூடியலவு இருக்குமா என்ற சந்தேகமே ... என்ன ஆனது அடுத்து அடுத்த தொடரில்

March 25, 2015

நானும் எழுத்தும்


காலம் என்பது எவ்வளவு வேகமாக ஓடி விடுகிறது அது யாருக்காகவும் எப்போதும் காத்திருப்பதில்லை அதோடு சேர்ந்து எப்படியாவது ஓடி விட வேண்டும் என்பதுதான் நியதி வேகமாக ஓடுபவன் வெற்றி பெறுகிறான் காலத்தோடு ஓட முடியாதவன் வெற்றிக்காய் காத்திருக்க வேண்டி இருக்கிறது .

சரியாக ஓராண்டுக்கும் மேலானா காலத்துக்கு பிறகே எனது குருவிக்கூட்டின் பக்கம் வரக்கிடைத்திருக்கின்ரது.. இந்த இடைப் பட்ட காலம் எனக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்தது . நிறைய வலிகளை கொடுத்தது தொலைதூரம் கொண்டு வந்தது கண்ணீர், வலி ,பிரிவு ,சிரிப்பு ,அன்பு , காதல் ,தனிமை இவற்றை தன்னோடு கூட்டி வந்தது.

எங்கோ என் நாட்டை விட்டு தொலை தூரம் வந்து என்னை தேடுகிறேன். எழுத்தோடு இனைய வேண்டும் அந்த காதல் மீண்டும் வேண்டும் நான் நானாக இருக்க என் நினைவுகளின் வழியே பயணிக்க என் தனிமையை துணையாக்க


அதற்காக நேரத்தோடு சண்டை போட போகிறேன். இயந்திர வாழ்க்கைக்கும் இயற்கை கற்பனைக்கும் இடையில் பாலைவனத்தில் இருந்து என் குருவிக்கூட்டுக்கு இறை தேட போகிறேன் . ஏற்கனவே நான் ரசித்தவைகளை  நான்ரசித்தவை என்ற வலை தளத்தில் கோர்க்கிறேன் இனி குருவிக்கூட்டில் என் பதிவுகளுடனும்

February 23, 2012

நிலாக் கடல் ( இறகு 02 )



                   முகத்தில் பட்ட நீர் துளிகள். தடவிப் பார்க்கப்பட்ட போது கை நனைக்கப்பட்டது. கை நீட்டினால் கைக்கெட்டும் தூரம் வரை மழையில்லை. முகத்திலிருந்த நீர் துடைக்க காதலி நீட்டிய தாவணி முனைபோல் வந்தது தென்றல். மறுபடி கால் நனைப்பு. காலுக்கடியிலிருந்த மணர்த்துகல்கள் இடம் பெயர்கின்றன. உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு சொல்லி விட்டன. பவணி வந்தவளின் பல்லழகு எங்கும் பால் வெளிச்சம். அது யார் வரைந்த ஓவியம் அழிக்கப்பட்டுவிட்டது. முன் வந்தவனை பின் தள்ளி ஓடி வந்து அழித்து விட்டுச் சென்று விட்டான்.  யார் அது  இசை மீட்டுவது. பளிச்சென்று புகைப்படப்பிடிப்பு.தென்னோலைகள் நிலா வெளிச்சம் கடன் வாங்கி என்னை புகைப்படம் எடுத்தது. நான் நின்று கொண்டிருப்பது கடற்கரையில் அதுவும் பௌர்ணமிக்கடற்கரையில். 

                  எங்கும் நிசப்தம் இயற்கையின் சப்தம் மட்டும் சங்கீதம் பாடுகிறது. என்ன இசை இசை மைந்தர்கள் சங்கீதம்  திருடிய இடம் இது. மனது எண்ணம் வரையும் போதே ஆமோதித்து பாடல் பாடியது சில்லுரி. மூச்சுவிடாமல் நீண்டதொரு பாடல் ராகம் தாளம் தெரியாத என்னால் ஏதோ ஒரு ராகம் புரியப்பட்டது. ஆடம்பரமில்லா அடித்தளமாய் கடலின் விசாலம். விலாசம் இல்லாத பலபேருக்கு வாழ்வு கொடுகிறது. உறுதியாகிறது தூரத்தில் ஒரு தோணி கடல் தடவி பயணிக்கிறது. எத்தனை அதிஷ்டசாலி அந்த மீனவன்  இத்தனை அழகுக்குள்ளே அமைதியான அவனது வாழ்வு. நகர வாழ்வில் நசுங்கும் நாங்கள். எங்களின் காது வாகனசப்தங்களால் மறுத்து போய்விட்டன. எங்கள் மூச்சுக்களையும் பேச்சுகளையும் பார்வையையும் காசுக்காய் விற்று விட்டோம். 


                 ஏதோ தொலைத்து விட்டதாய் என் உள்ளம் உளரியது. உலகின் உள்ளங்கையில் எத்தனை அழகு. ஆம் இத்தனை நாளாய் ரசனையைத் தொலைத்து விட்டேன். இவ்வளவு நாளாய் எத்தனை இடங்களைத் தாண்டியிருப்பேன். அத்தனையையும் இந்த நவீனம் என்னிடமிருந்து பறித்து எடுத்ததாய் உணர்கிறேன். ஆழ் கடலின் அலைச் சப்தம் எனக்கு ஆறுதல் சொல்லியது. இது என் இடம் என்னைத்தவிர இங்கு வேறு மனிதரில்லை இங்கு நான் நானாய் இருக்கலாம். என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை நான் யாரையும் கட்டுப்படுத்த தேவையுமில்லை.


                 என் கால்கள் இரண்டும் முழந்தாலிட  கைகள் இரண்டும் மணல் தொட்டது . கடல் நீர் விரல் நனைக்க கடல் காற்று தலை தடவியது. மனதின் கணங்கள் இறக்கப் பட்டதாய் உணர்வு. என் வாழ்வில் வலி தொடும் வேளைகளில் இந்த கடல் தண்ணீரில் கண்ணீர் வடித்திருக்கலாமோ. அப்படி பலர் வந்து கண்ணீர் சிந்தியதாலோ உப்பு நீராகியது இந்நீர். என் நீரையும் உன்னோடு இப்போது சேர்த்துக் கொள். கண்ணீர் சிந்தினேன் வாழ்வில் முதன் முறையாய் நிம்மதியாய் கண்ணீர் சிந்தினேன். நிம்மதி இப்பொழுது நினைவுகள் மட்டும் மீதம் வலிகளை வடித்து விட்டேன்.


                அப்படியே என் முகங்களை கடற்கரை மணலில் புதைத்தேன். அதன் வாசனையை என் நாசி உணரப்படும் அளவுக்கு புதைத்தேன். அமைதியாய் மூச்சடக்கி முழுமையாய் மண்ணில் படுத்தேன். என் பக்கத்தில் யாருமில்லை நான் மண்ணோடு ஒன்றி விட்டேன். அந்த நிசப்த நிமிடங்கள் எனக்கு மரணத்து மணிகளை ஞாபகமூட்டின. இப்படித்தான் முடியப்போகிறது ஒரு நாள் என் வாழ்வு இல்லை இல்லை எல்லோருடைய வாழ்வும். எத்தனை யதார்த்தம். எனக்கு வேறு எந்த மணித்துளியும் இந்த மணித்துளியை உணர்த்தவில்லை. ஒரு இயற்கையை இன்னொரு இயற்கையால்தான் உணர்த்த முடியும் உணரவும் முடியும். 


                  எழுந்தேன். சப்தமிட்டேன் என்னால் முடியும் வேண்டிய மட்டும் சப்தமிட என் சப்தம் தடுக்க முடியாது யாராலும். வைரமுத்துவின் கவிதைபோல் நான் இங்கு ஊர் வாயை மூடத் தேவையுமில்லை என் செவிகளை மூடத் தேவையுமில்லை. எனக்கு இந்த அமைதி தந்தது சுதந்திரம் இன்று. இந்த கடல் சாட்சியாய் எத்தனை நாடகம் நடந்து முடிந்தது அன்று. துப்பாக்கி வேட்டுகளாய் எவ்வளவு குருதிகள் ஒன்றிவிட்டன கண்ணீரோடு. கடற்கரை ஓரத்து சிவப்பு உயிர் மீட்டியது அவர்களது நினைவுகளை. மணற்துகள்களாய் அவர்களது நினைவுகள் அழிக்கப்படும் போது. இந்த கடற்கரை மணற்துகள்கள் அதை சேமித்து வைத்திருக்கின்றன.


                  கடலைகளே செவிமெடுங்கள் கற்றே கேள்  என் கவிதைகளை உங்கள் முன் தூவுகிறேன். என் கவிஞனும் அப்படித்தான் தன் கவிகளை வயல் வெளிகளுக்கு ஒப்புவித்தான். நான் உங்களிடம். ஏனனில் அதை நான் உங்களிடமிருந்துதான் திருடினேன். காதலியிடமிருந்து திருடப்பட்ட அவளது இதயம் போல் எத்தனை முறை திருடினாலும் இனிக்கிறது.

February 08, 2012

நான் (தம்பனுரான்)

பள்ளி பருவம் முடித்து பேனை தொட்ட தருணங்களில். பல முறை பிரசவமான பல்வேறு படைபுக்களை கண் பார்த்து காது கேட்டு உள்ளம் எங்கோ எனை மறந்து. மூச்சடக்கி முக்கி எழுந்த கணங்களிலும். பல நூறு நூற்களில் நான் பார்த்தவை வெறும் எழுத்துகளல்ல காலம் நீந்திக் கடந்தவர்களின் பிரசவமே காகிதப் பெண்களுடன் பேனாவின் ஊடலால் ஏற்பட்ட பிரசவமே அந்த பிரசவக் குஞ்சுகள் கழுகுகலாகிப் பறந்த தருணங்களில் கோழிக் குஞ்சாய் பல முறை பறக்க முட்பட்டிருகிறேன் இப்பொழுதும் முற்படுகிறேன். கோடிகாலம் காத்திருந்து தேடிப்பிடித்த மனைவியை கட்டியணைப்பது போல பற்றி பிடித்துக் கொண்டேன் பேனாவை. ஊடல் கொள்ளும் தேடல் தளமாய்  ஆக்கினேன் காகிதத்தை.
 தொலைந்து போன தோழியையும் தேடிப்பெற்ற நண்பர்களையும் மறந்து போன காதலையும் கடந்து போன பள்ளியையும் காத்து நிற்கும் காலத்தையும் மீட்டி ஓட்டி பார்க்க நினைக்கிறன் பேனாவின் தோலிலேறி இல்லை இல்லை பேனாவை என் தோலிலேற்றி. வலித்தாலும் என் பாதம் முன் வைக்க முயலுவேன் முடியாத கதைகலேன்று  மனது சொன்னவை முடிந்து விட்ட பதை என்று காலம் சொன்னவை இன்னும் எத்தனையோ மர்மதேச கதைகளாய் நீளும். நான் பேனா பிடித்து நடை பழகிய தருணங்களில் கை பிடித்து தூக்கிவிட்டவர் சிலரே " வேறு வேலை எதாவது செய் " என்று தூக்கி எறிந்தவர்கள் கணக்கில் அதிகம்.இன்னும் நான் பெரியவனாகவில்லை இலக்கிய பால் குடி மறவாத குழந்தையே .

February 07, 2012

எம் கணா ஒரு கணா

             "மனிதனாய் பிறந்திட்டால் ஏதாவது செய்திடனும் அதுவும் வித்தியாசமா செய்திடனும் " எப்புடிங்க பஞ்ச் dialog . இல்லைங்க உண்மைக்கும் மேலே சொன்ன மாதிரி ஏதாவது  வித்தியாசமா செய்யனும்டு நாங்களும் ஆசைப்பட்டோமுங்க . ஆசைப்பட்டதோட நிக்காம ஒண்டு செஞ்சமுங்க . என்னண்டா கேக்குறிங்க? அத சொல்லத்தானுங்க இந்த பதிவே .


        அதாங்க short flime ( குறுந்திரைப்படம் ) அதன இது ஒன்டும் புதிசில்லையே நீங்க கேக்குறது புரிது ஆனா எங்க ஊர்ல இது வித்தியசம்தானுங்க நாங்க அறிஞ்ச வரைக்கும் யாரும் எங்க ஊர்ல இப்புடி ஒரு முயற்சி எடுக்கலைங்க . அதுவும் இருந்ததே கொஞ்சம் போல வளம் தானுங்க . ஆ ஒன்டு சொல்லனும் இந்த படத்துக்கு ஒருத்தர் இருக்காருங்க உண்மைலே  இந்த கணா அவர்ரதானுங்க . அப்ப நீ என்ன செஞ்சண்டுதான கேக்குறிங்க  புரிது புரிது  அத நான் எப்புடிங்க சொல்லுவன் நீங்களே பாத்து கண்டுபிடிங்க.
 

     சரி இந்த பதிவின்ட முக்கியமான காரணமே இது எங்கட முதல் முயற்சி மக்களே பாராட்டாடியும் திட்டி தீர்த்தாவது உங்கட கருத்துகள எங்களுக்கு வாலங்குவிகண்டு நம்புறம் pls சும்மா பாத்துட்டு மட்டும்  போயிறாதிங்க. கூடிய  சீக்கிரம் எங்கட முயற்சிய கொண்டு வந்து சேர்போமுங்க. மிச்சத்த Diractor manazeer சொல்லுவருங்க

Related Posts Plugin for WordPress, Blogger...