பள்ளி பருவம் முடித்து பேனை தொட்ட தருணங்களில். பல முறை பிரசவமான பல்வேறு படைபுக்களை கண் பார்த்து காது கேட்டு உள்ளம் எங்கோ எனை மறந்து. மூச்சடக்கி முக்கி எழுந்த கணங்களிலும். பல நூறு நூற்களில் நான் பார்த்தவை வெறும் எழுத்துகளல்ல காலம் நீந்திக் கடந்தவர்களின் பிரசவமே காகிதப் பெண்களுடன் பேனாவின் ஊடலால் ஏற்பட்ட பிரசவமே அந்த பிரசவக் குஞ்சுகள் கழுகுகலாகிப் பறந்த தருணங்களில் கோழிக் குஞ்சாய் பல முறை பறக்க முட்பட்டிருகிறேன் இப்பொழுதும் முற்படுகிறேன். கோடிகாலம் காத்திருந்து தேடிப்பிடித்த மனைவியை கட்டியணைப்பது போல பற்றி பிடித்துக் கொண்டேன் பேனாவை. ஊடல் கொள்ளும் தேடல் தளமாய் ஆக்கினேன் காகிதத்தை.
தொலைந்து போன தோழியையும் தேடிப்பெற்ற நண்பர்களையும் மறந்து போன காதலையும் கடந்து போன பள்ளியையும் காத்து நிற்கும் காலத்தையும் மீட்டி ஓட்டி பார்க்க நினைக்கிறன் பேனாவின் தோலிலேறி இல்லை இல்லை பேனாவை என் தோலிலேற்றி. வலித்தாலும் என் பாதம் முன் வைக்க முயலுவேன் முடியாத கதைகலேன்று மனது சொன்னவை முடிந்து விட்ட பதை என்று காலம் சொன்னவை இன்னும் எத்தனையோ மர்மதேச கதைகளாய் நீளும். நான் பேனா பிடித்து நடை பழகிய தருணங்களில் கை பிடித்து தூக்கிவிட்டவர் சிலரே " வேறு வேலை எதாவது செய் " என்று தூக்கி எறிந்தவர்கள் கணக்கில் அதிகம்.இன்னும் நான் பெரியவனாகவில்லை இலக்கிய பால் குடி மறவாத குழந்தையே .