fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

June 09, 2018

என் ஒற்றை மேகமே

என் ஒற்றை மேகமே 
என் கனவுகளின் இளவரசியே
மந்திர புன்னகையின் மாயக்காரியே 
உன் மடி உறங்க
உன் கன்னத்தில் 
முத்தங்களால் கவிதை எழுத
உன் கனவுகளில் தென்றலின் தடம் பதிக்க
உனக்கான என்னையும்
எனக்கான உன்னையும்
இடம் மாற்றிக் கொள்ள
என் கண்ணீரில் உனை நனைக்க
உன் புன்னகையை நான் பூசிக்கொள்ள
காதலின் அர்த்தம் தெரிய
காமத்தின் மர்மம் தெளிய
வாழ்வின் சுவை புரிய
தகஜ்ஜத்தின் முஸல்லா விரிய
பஜ்ரின் தேனீர் சுவைக்க
கடைசி வரை சுவர்க்கம் வரை
உன்னோடு கைகோர்த்து பயணிக்க
என் நொடிகள் அனைத்தையும் கோர்க்கிறேன்

August 02, 2016

விடையில்லா குழப்பம்


உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும் 
விடு பட நினைக்கையில்
காதலிக்க தொடங்குகிறோம்
வன்முறைகளுக்கு அப்பால்
வாழ்ந்து பாப்போம் வா
ஒன்றோடு இரண்டாக
மூன்றை சேர்த்தது நீதானே
இருள் மேகங்கள்
தெளித்து விட்ட
குழப்பத்தில் துளிகளை
என்மீது
விசிறி எறிந்தவள் நீதானே
என் உள்ளத்தில்
உறைந்து விட்ட
வலி தாங்க நினைவுகளோடு
உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும்
விடு பட நினைக்கையில்
காதலிக்க தொடங்குகிறோம்

April 22, 2012

பேதை மகள்



ஒழுகுற வீடு ஒன்டுதான்
எங்களோட சொத்து
பள்ளிக்குச்  சென்று படி
காகிதப்பூ தலையில சூடாத
மல்லிகை பூ நான் பாக்கன்
பெத்த மகளை அனுப்பி வச்சான்
சொத்தில்லா அந்த அப்பன்

நல்லாத்தான் படிச்சா அவள்
பாடத்தவிட அவன
அவன்ட கை பிடிச்ச போதையில
பள்ளிக்கூடம் தனை மறந்து
பாதையிலே திரிந்திருந்தாள் பேதை மகள்

ஆத்தி மகன் வேலைக்காய்
கொழும்புக்கு சென்றவன்
கூத்தி மக்கள் சகவாசம்
களித்து விளையாட தலை விட்டான்

கை பிடிச்ச தலை மகன்
கரம்பிடிக்க வாருவான் என்று
ஏங்கித் தவிக்கிறாள்
மடியில் நீர் துளிகள்
விட்டு ஓட்டை பார்க்கிறாள்
அதில் மாற்றம் இல்லை
மன ஓட்டை மட்டும் பெரிதானது
 
 

February 13, 2012

எதிர்பார்ப்பு

அன்புள்ள அன்புக்கு
எத்தனை முறை எழுதிவிட்டேன்
அன்பு என்ற சொல்லும்
தேய்ந்ததாய்த் தெரிகிறது
ஆனால் உன் அன்புதான்
வளர்ந்ததாய்த் தெரியவில்லை
 
நான் ஏதேனும்
வார்த்தை பிழை விட்டேனோ ?
இலக்கணம் தவறினேனோ ?
எழுத்து எடாகுடமோ ?
எதுதான் நடந்ததோ ?
இத்தனையும் பேசிவிட்டு
மூச்சுவிட்டு நான் தரை பார்க்க
என் முகம் நீ பார்த்தாய்
 
தொண்டை குழி பதபதக்க
குரலில் சிறு தென்றல் நடுங்க
நீ சொன்னாய்
கடிதம் வரைந்தது நீதானா?
கொடுத்தது நீ இல்லையே
எழுத்து  பார்த்து
இலக்கணம் மதிப்பிட
நான் ஒன்றும் வாசகியல்ல
உன் அன்புக்காய் காத்திருந்த
காதலி
வார்த்தையில்  பார்வையில்
மூச்சில் மனதில்
அத்தனையிலும் எதிர்பார்த்தேன்
வர்ணனை எழுத்தில் மட்டுமல்ல
வாழும் காலம் வரை
" நான் உன்னை காதலிக்கிறேன்"

Related Posts Plugin for WordPress, Blogger...