fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label உளறல்கள். Show all posts
Showing posts with label உளறல்கள். Show all posts

September 01, 2015

நானும் விரிவுரையாலறாய் - 1



ஒரு தொழிலை நாம் விட்டு வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான் இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள் அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான் என எண்ணத் தோன்றுகிறது.

நான் எனது தகவல் தொழில் நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது. அதற்காக எனது நண்பர்கள் எல்லாம் அரச காரியாலயங்களை தெரிவு செய்ய .நானும் சொந்த ஊருக்கு (polonnaruwa)  திரும்பி இருந்தேன் அரச காரியாலயங்களில் இடம் தேட.
அந்த நேரத்தில் எனது சிரேஷ்ட (senior ) சகோதரியிடம் இருந்து வந்த அழைப்பின் பெயரால் மீண்டும் நான் கல்லூரில் கல்வி கற்ற திருகோணாமலை நகரத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கியமான தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Esoft Metro Campus நிறுவனத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு சென்றேன். இந்த இடத்தில்  ஒரு விடயம் ஞாபகப் படுத்தப் பட வேண்டும் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்ததால் Esoft ,ICBT ,BCAS ,IBS  போன்ற நிறுவனங்களில் கற்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்தது இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்த நிறுவனங்களில் ஏதும் எமது மாவட்டத்தில் அந்த நேரத்தில் காணப் படவில்லை ஆகவே வெளியூர் சென்றுதான் கற்க வேண்டும் அதற்கான செலவுகள் அதிகமாக கணப் பட்டமை இரண்டாவது இந்த மாதிரியான தனியார் நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என எண்ணியமை ( அது இல்லையென பின்னாட்களில் புரிந்தது)

இப்படி நாம் படிக்கவே முடியாது என எண்ணிய இடத்தில் விரிவுரையாளருக்கான நேர்முக பரீட்சைக்கு வந்திருப்பது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நேர்முகப் பரீட்சைக்கு நேராக சொந்த ஊரில் இருந்து வந்து இரங்கி  திருகோணமலையின் மத்திய பஸ்தரிப்பிடத்துக்கு எதிரில் அமைந்து உள்ள NSB BUILDING என அழைக்க பட்ட கட்டிடத்தில் இரண்டாவது மாடிக்கு ஏறினேன். நிறையவே தைரியம் இருந்தது காரணம் அதற்கு முதல் நாளே எனது சிரேஷ்ட மாணவியிடம் call  பண்ணி ஆயிரம்  கேள்விகள் கேட்டாகி விட்டது ஏன் என்றால் அவரும் அங்கேதான் வேலை பார்க்கிறார்.

கண்ணாடி கதவு திறந்து உள் நுழைந்ததும் வாரவேட்பரையில் ஒரு பெண் good morning என்றார் பதிலுக்கு நானும் good morning சொல்ல . sir நீங்க interview குதனே வந்து இருக்கிங்க உள்ள போங்க இதான் manager room என எதிரில் இருந்த room ஐ காட்டினால். கதவைத்திறந்து உள்ளே நுழைந்தேன்  youtube ,google அனைத்திலும் தேடிய How to face interview மனதிற்குள்ளே ஓடியது இதுதான் நான் தகவல் தொழில் நுட்பம் கற்ற பின்பு சந்திக்க போகும் முதலாவது நேர்முகப் பரீட்சை.

Excuse me may i coming என்ற வாசகத்துடன் உள் நுழைய Yes, Coming என்று வரவேற்றார் அன் நிறுவனத்தின் முகாமையாளர் Dewananth Kumarakurunathan . நீங்கதான fasni    cv தாங்க பாப்பம் என தமிழிலே ஆரம்பித்தது புது தெம்பை எனக்கு வழங்கியது பின்னர் சில கேள்வி விடை என நேர்முகப் பரீட்ச்சை இறுதியாய் சொன்னார் எல்லாம் ok  நாளைக்கு வந்து class ஒன்டு எடுங்கோ மாணவர்களில் feedback ஐயும் நீங்க எப்படி class எடுக்கிறிங்க என்டுரத்தையும் பொறுத்தே Result . எல்லா Class உம் English லதான் ஆனா நீங்க படிப்பிக்க போற பிள்ளையள் சிங்களம் எண்டுரதால சிங்களத்தாலதான் விளங்க படுத்த வேனும் ok  seeyou  என விடை கொடுத்தார்

ஆம் என தலையாட்டி வெளியே வந்தேன். ஒரே ஒரு குழப்பத்துடன். சிங்களம் என் தாய் மொழி அல்ல ஆனால் என் ஊர் வாழ்த்த சமூகம் பழகிய  நண்பர்களின் பொருட்டால் சிங்களம் தெரியும் ஆனால் சிங்களத்தில் கற்பிக்க கூடியலவு இருக்குமா என்ற சந்தேகமே ... என்ன ஆனது அடுத்து அடுத்த தொடரில்

February 23, 2012

நிலாக் கடல் ( இறகு 02 )



                   முகத்தில் பட்ட நீர் துளிகள். தடவிப் பார்க்கப்பட்ட போது கை நனைக்கப்பட்டது. கை நீட்டினால் கைக்கெட்டும் தூரம் வரை மழையில்லை. முகத்திலிருந்த நீர் துடைக்க காதலி நீட்டிய தாவணி முனைபோல் வந்தது தென்றல். மறுபடி கால் நனைப்பு. காலுக்கடியிலிருந்த மணர்த்துகல்கள் இடம் பெயர்கின்றன. உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு சொல்லி விட்டன. பவணி வந்தவளின் பல்லழகு எங்கும் பால் வெளிச்சம். அது யார் வரைந்த ஓவியம் அழிக்கப்பட்டுவிட்டது. முன் வந்தவனை பின் தள்ளி ஓடி வந்து அழித்து விட்டுச் சென்று விட்டான்.  யார் அது  இசை மீட்டுவது. பளிச்சென்று புகைப்படப்பிடிப்பு.தென்னோலைகள் நிலா வெளிச்சம் கடன் வாங்கி என்னை புகைப்படம் எடுத்தது. நான் நின்று கொண்டிருப்பது கடற்கரையில் அதுவும் பௌர்ணமிக்கடற்கரையில். 

                  எங்கும் நிசப்தம் இயற்கையின் சப்தம் மட்டும் சங்கீதம் பாடுகிறது. என்ன இசை இசை மைந்தர்கள் சங்கீதம்  திருடிய இடம் இது. மனது எண்ணம் வரையும் போதே ஆமோதித்து பாடல் பாடியது சில்லுரி. மூச்சுவிடாமல் நீண்டதொரு பாடல் ராகம் தாளம் தெரியாத என்னால் ஏதோ ஒரு ராகம் புரியப்பட்டது. ஆடம்பரமில்லா அடித்தளமாய் கடலின் விசாலம். விலாசம் இல்லாத பலபேருக்கு வாழ்வு கொடுகிறது. உறுதியாகிறது தூரத்தில் ஒரு தோணி கடல் தடவி பயணிக்கிறது. எத்தனை அதிஷ்டசாலி அந்த மீனவன்  இத்தனை அழகுக்குள்ளே அமைதியான அவனது வாழ்வு. நகர வாழ்வில் நசுங்கும் நாங்கள். எங்களின் காது வாகனசப்தங்களால் மறுத்து போய்விட்டன. எங்கள் மூச்சுக்களையும் பேச்சுகளையும் பார்வையையும் காசுக்காய் விற்று விட்டோம். 


                 ஏதோ தொலைத்து விட்டதாய் என் உள்ளம் உளரியது. உலகின் உள்ளங்கையில் எத்தனை அழகு. ஆம் இத்தனை நாளாய் ரசனையைத் தொலைத்து விட்டேன். இவ்வளவு நாளாய் எத்தனை இடங்களைத் தாண்டியிருப்பேன். அத்தனையையும் இந்த நவீனம் என்னிடமிருந்து பறித்து எடுத்ததாய் உணர்கிறேன். ஆழ் கடலின் அலைச் சப்தம் எனக்கு ஆறுதல் சொல்லியது. இது என் இடம் என்னைத்தவிர இங்கு வேறு மனிதரில்லை இங்கு நான் நானாய் இருக்கலாம். என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை நான் யாரையும் கட்டுப்படுத்த தேவையுமில்லை.


                 என் கால்கள் இரண்டும் முழந்தாலிட  கைகள் இரண்டும் மணல் தொட்டது . கடல் நீர் விரல் நனைக்க கடல் காற்று தலை தடவியது. மனதின் கணங்கள் இறக்கப் பட்டதாய் உணர்வு. என் வாழ்வில் வலி தொடும் வேளைகளில் இந்த கடல் தண்ணீரில் கண்ணீர் வடித்திருக்கலாமோ. அப்படி பலர் வந்து கண்ணீர் சிந்தியதாலோ உப்பு நீராகியது இந்நீர். என் நீரையும் உன்னோடு இப்போது சேர்த்துக் கொள். கண்ணீர் சிந்தினேன் வாழ்வில் முதன் முறையாய் நிம்மதியாய் கண்ணீர் சிந்தினேன். நிம்மதி இப்பொழுது நினைவுகள் மட்டும் மீதம் வலிகளை வடித்து விட்டேன்.


                அப்படியே என் முகங்களை கடற்கரை மணலில் புதைத்தேன். அதன் வாசனையை என் நாசி உணரப்படும் அளவுக்கு புதைத்தேன். அமைதியாய் மூச்சடக்கி முழுமையாய் மண்ணில் படுத்தேன். என் பக்கத்தில் யாருமில்லை நான் மண்ணோடு ஒன்றி விட்டேன். அந்த நிசப்த நிமிடங்கள் எனக்கு மரணத்து மணிகளை ஞாபகமூட்டின. இப்படித்தான் முடியப்போகிறது ஒரு நாள் என் வாழ்வு இல்லை இல்லை எல்லோருடைய வாழ்வும். எத்தனை யதார்த்தம். எனக்கு வேறு எந்த மணித்துளியும் இந்த மணித்துளியை உணர்த்தவில்லை. ஒரு இயற்கையை இன்னொரு இயற்கையால்தான் உணர்த்த முடியும் உணரவும் முடியும். 


                  எழுந்தேன். சப்தமிட்டேன் என்னால் முடியும் வேண்டிய மட்டும் சப்தமிட என் சப்தம் தடுக்க முடியாது யாராலும். வைரமுத்துவின் கவிதைபோல் நான் இங்கு ஊர் வாயை மூடத் தேவையுமில்லை என் செவிகளை மூடத் தேவையுமில்லை. எனக்கு இந்த அமைதி தந்தது சுதந்திரம் இன்று. இந்த கடல் சாட்சியாய் எத்தனை நாடகம் நடந்து முடிந்தது அன்று. துப்பாக்கி வேட்டுகளாய் எவ்வளவு குருதிகள் ஒன்றிவிட்டன கண்ணீரோடு. கடற்கரை ஓரத்து சிவப்பு உயிர் மீட்டியது அவர்களது நினைவுகளை. மணற்துகள்களாய் அவர்களது நினைவுகள் அழிக்கப்படும் போது. இந்த கடற்கரை மணற்துகள்கள் அதை சேமித்து வைத்திருக்கின்றன.


                  கடலைகளே செவிமெடுங்கள் கற்றே கேள்  என் கவிதைகளை உங்கள் முன் தூவுகிறேன். என் கவிஞனும் அப்படித்தான் தன் கவிகளை வயல் வெளிகளுக்கு ஒப்புவித்தான். நான் உங்களிடம். ஏனனில் அதை நான் உங்களிடமிருந்துதான் திருடினேன். காதலியிடமிருந்து திருடப்பட்ட அவளது இதயம் போல் எத்தனை முறை திருடினாலும் இனிக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...