fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

June 08, 2023

பிரவாசியிண்ட ஜீவிதம்

 மலையாள சினிமாவும் கதையும் கதை மாந்தர்களும் எமது வாழ்வோடு நாம் சந்திக்கும் மனிதர்களோடு ஒன்றிப்போவதால் என்னமோ எனக்கு மலையாள சினிமா மீது அலாதி பிரியம். சில படங்கள் மனதோடு சேர்த்து கண்களையும் நிறைத்து விடும் அப்படிதான் நான் அண்மையில் பார்த்த


"Kadina Kadoramee Andakadaham"  திரைப்படம் மனதுக்கு நெருக்கமாகி போனது கிட்டத்தட்ட ஒரு தசாப்பதம் கடல்தாண்டி எனக்கு கழிய போகிறது இத்தனை காலம் இந்த நாட்டில் நாடுவிட்டு வந்த நாடோடிகளில் பல கஷ்டங்களை கண்டிருக்கிறேன் நல்லது கேட்டது அனைத்தும் வெளிநாட்டு வாசிக்கு தூரத்து செய்திதான் ஆனால் அவன் மரணமும் அவனது உறவுகளுக்கு துரத்து செய்தியாகி போவதுதான் மிகக்கொடுமையான விடயம் இங்கு கத்தாரில் அபூஹமூர் மைய வாடியில் குடும்பங்களின்  கனவுகளை சுமந்துவந்த எத்தனையோ உறவுகள் கபூருக்குள் நித்திய துயில் கொள்கின்றனர் 


பச்சு என்கிற பதுர்டீன் குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் வாப்பா கத்தாரில் இருக்கிறார் இவனையும் வெளிநாடு போக சொல்லி பலர் நிர்பந்தித்தும் அவனுக்கு செல்ல விருப்பம் இல்லை ஊரில் ஏதாவது சொந்த தொழில் செய்து செட்டில் ஆகவேண்டும் என்பது அவனது ஆசை இதனால் அவன் நேசித்த அவனது மச்சியை கூட அவனால் திருமணம் முடிக்க முடியாமல் போய் விட்டது இதற்குள் கொரோனா வேறு எமது வாழ்வில் எப்படி செல்வாக்கு செலுத்தியது என்பதும் நாட்டுக்கு வர ஒரு நாள் இருக்கையில் மௌத்தாகி போன வாப்பாவின் மைய்யித்தை எப்படி நாட்டுக்கு கொண்டு வந்தான் என்பதும் உம்மா கடைசியாக வாப்பாவின் முகத்தை பார்க்க ஆசைப்பட்டதை நிறைவேற்றினானா என்பதும்தான் பாடம் அதில் மௌத்தாகிப்போன கமர்தினின் நண்பன் ஹசன் என்ற ஒரு கதாப்பாத்திரம் இருக்கும் அத்தனை பிணைப்பு அவர் வசனங்களால் நமக்கு ஏற்படும்  முஹ்ஸின் இயக்கி இருக்கும் இந்த படத்தில் எனது பிரியமான இயக்குனர் பசில் ஜோசப் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் 

அதிலும் குறிப்பாக கோவிந்த் வசந்த் இசையில் பாத்திமா ஜஹான் பாடிய பிரேமகத்து பாட்டு மனதில் நிற்கிறது அதில் ஒரு வரி வரும் 

Priyane Priyane Priyane Priyane
Varikal Nee Vayikkyanay Eyuthunnathare
Raa Pakaludayonayonte Namamodi Premathale

அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

இந்த வரிகளை நீங்கள் படிக்க எழுதுகிறேன்

என் ஆன்மாவைக் கவரும் அன்புடன், எஜமானரின் பெயரில், பகல் மற்றும் இரவுகளைக் காப்பவர்


Nee Illa Maniyarayulil,
Njan Alle Maqbara Ullil
Nee Ullora Irularayil
Njan Ille Theeeyaay

எங்கள் திருமண பந்தலில் உங்கள் பக்கத்தில் இல்லையென்றால்,

என் இதயம் தனிமையான கல்லறையாக மாறுகிறது.

நீங்கள் எந்த இருளில் வசித்தாலும்,

ஒரு சூடான தீக்குளி நான் இருப்பேன்.

Kulirumbol Choodekan
Thalarumbol Koottekan
Priyane Nee Novalle
Poomeni Thalodave

குளிரில், நான் உங்கள் நெருப்பாக இருப்பேன்

சோர்வில், நான் உங்கள் ஓய்வாக இருப்பேன்

விரக்தியடையாதே, என் அன்பே

உன்னுடைய மென்மையான உடலைப் பற்றிக்கொள்ளட்டும்

Murivellam Maykkame
Poonkavilil Muthame
Kanne Kann Nirayalle Karunamayanayonte
Kannil Nee Kuliranee

உன் காயங்களை ஆற்றட்டும்

உன் புருவத்தில் முத்தமிடுகிறேன்

அழாதே, என் அன்பே. ஏனென்றால் நீங்கள் விலைமதிப்பற்றவர் மற்றும் மரியாதைக்குரியவர்

தெய்வீகத்தின் பார்வையில்


Verazham Vannu Nee Kathil Thannu

Puthu Pookkal Vannu Rithu Kaval Ninnu

Nee Poyeram Poovadi 


உங்கள் ஆழத்தில் என் வேர்கள், ஆழமான மற்றும் ஆழமானவை

நீங்கள் மிகவும் தூய்மையான அன்பைக் கொண்டு வந்தீர்கள்

எனக்காக புதிய பூக்கள் மலர்ந்தன

பருவங்கள் நமக்குக் காவலாக இருந்தன

திரும்பி வா, என் அன்பே வீட்டிற்கு வா


ஒரு முறை பார்த்து விடுங்கள் மலையாளம் தெரிந்தால் மலையாளத்தில்






January 30, 2016

இறுதிச் சுற்று-திரைவிமர்சனம்

சினிமா எனக்கு எப்பவுமே எதையாவது எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அது நல்லதோ கேட்டதோ . நீண்ட நாட்களாய் நான் காத்திருந்த ஒரு படம் இறுதி சுற்று நேற்று அதை நண்பர்களுடன் பார்த்தாகி விட்டது இன்று இந்த பதிவு எழுதும் வரையும் அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியானால் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றுமொரு சினிமா இது.
எனக்கு முஹம்மது அலியை தெரியும் குத்துச் சண்டை தெரியும் என்னை   போலவே உங்களுக்கும் இது தெரியும் அதன் பின்னால் உள்ள வலி போராட்டம் வேதனை வெறி காதல் காமாம் துரோகம் தெரியுமா உங்களுக்கு அதுவே இறுதி சுற்று. 
      ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த மேடி  என்ற மாதவன் விசுவரூபம் எடுத்து, முடி-தாடி வளர்த்து திரும்பியிருப்பது “இறுதிச் சுற்று” படத்தின் மூலம்! ஒரே நேரத்தில் இந்தியிலும், தமிழிலும் வெளியாகின்றது இந்தப் படம்!
மாதவனுக்கு இன்னொரு மகுடம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார் – உடலைச் செதுக்குவதிலும் – குத்துச் சண்டை பயிற்சிகளில் ஈடுபடுவதிலும் – நடிப்பிலும்!
தமிழில் மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கு, தடம் மாறாத திரைக்கதையும், பெண்களுக்கான குத்துச்சண்டை விளையாட்டு என்ற இதுவரை யாரும் கையாளாத கதைக்களம் என்பதும் மிகவும் பிடித்துப் போகும்.
வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களை வருண் மணியனின் ரேடியன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவர் சசிகாந்த். இவருடைய ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம், தற்போது சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் கைகோத்து. இரண்டு நிறுவனங்களும் இணைந்து ‘இறுதிச் சுற்று’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
கதை-திரைக்கதை

தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று!

குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக்  கோச்சாக இருக்கிறார் மாதவன். 

நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷ‌ன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே.
சென்னையில் ஜுனியர் கோச்சாராக இருக்கும் நாசரால் கைகாட்டப்படுகிற மும்தாஜ் சொர்க்காரை விட அவள் தங்கை ரித்தீகா சிங்கிடம்,  தன்னிடம் இருக்கும் வேகமும், வெறியும், பாக்ஸிங் ஆர்வமும் இருப்பதைக் காண்கிறார் மாதவன். அக்காவை போல் பாக்சிங் ஆர்வத்தினால் அல்லாமல் மாதவன் தரச் சம்மதித்த  பணத்துக்காக பயிற்சிக்கு செல்கிறார் ரித்திகா. 

கோபமும் திமிரும் தன்னைவிட இரண்டு மடங்கு இருக்கும் ரித்திகாவை கட்டுக்குள் கொண்டு வந்து அவருக்கு பயிற்சி அளிக்கிறார் மாதவன். ஆனால், அவரை சாம்பியன் பாக்ஸர் ஆக்கும் லட்சியத்துக்கு ரித்திகாவின் முரட்டுப் பிடிவாதம், அவள் அக்காவின் பொறாமை,  அஸோசியேஷன் அரசியல் எனப் பல தடைக் கற்கள்.  இதையெல்லாம் மீறி அவர் வென்றாரா இல்லையா என்பதே இறுதிசுற்று.

கலைந்த கேசம், இரும்பு தேகம், முரட்டு கோபம்... வாவ்... இது மேடி வெர்ஷன் 2.0. எள்ளலும் முரட்டுப் பிடிவாதமும் கொண்ட கோச்சாக. திடமான, தெளிவான, திமிரான வீரனாக அட்டகாசம். ரிங்கில் சண்டை நடக்கும்போது கீழேயிருந்து வெறியுடன் ஊக்கப்படுத்துவது, நடப்பதையெல்லாம் மிக அமைதியாகப் பார்த்துக்கொண்டே மூர்க்க ரியாக்ஷன் கொடுப்பது, ரித்திகாவின் வேகத்தைக் கண்டு அவர் செய்யும் சேட்டைகளை மிகஅலட்சியமாகப் புறந்தள்ளிவிட்டு அவருடைய திறமையை வெளியே கொண்டுவருவதற்காகப் போராடுவது என 'சக்தே' ஷாருக்கையே சமயங்களில் லெஃப்டில் அடித்து எகிறுகிறார். படம் முழுக்க அவ்வளவு எகிறிவிட்டு, க்ளைமாக்சில் சட்டென பணியும்போது வெளிப்படும் ஒரு இயலாமை... க்ளாஸிக். அப்போதும் '***** நீ அவ்ளோதான்டா' என்று அடக்கப்பட்ட கோபத்துடன் எகிறுவது..... ஆவ்ஸம்... ஹேண்ட்ஸம் மேடி.

பிரியாணி, தனுஷ் படம், அம்மாவுக்கு புது சேலை என‌ இவைகளில் திருப்திய‌டைகிற பெண்ணாக அறிமுகமாகும் ரித்திகா, க்ளைமாக்சில் சர்வதேச சாம்பியனாக பிரமாண்ட பிரமிப்பூட்டுவது... மெஸ்மரிச மேஜிக்! 'நீ கொடுத்த காசுக்கு ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு.. அவ்ளோதான்' என மாதவனை தெறிக்க விடுவதும், மாதவனை வெறுப்பேற்ற போட்டியில் வேண்டுமென்றே ஃபவுல் செய்துவிட்டு ரிங் கார்னரில் கெத்தாக நிற்பதாகட்டும், 'முதல் தடவை காதல் சொன்ன எனக்கே அந்தர் ஆகலை. உனக்கு என்ன?' என சேலையில் செமத்தி கெத்து காட்டுவதும், கடைசிப் போட்டி முடிந்ததும் குரங்குக் குட்டியாக மாதவன் இடுப்பில் தாவிக் கொள்வதும்... செல்லம் பின்னிட்டடா..! ஒவ்வொரு அரை மணி நேரங்களிலும் தன் கேரக்டரின் வெயிட் ஏற்றிக் கொண்டே செல்லும் ரித்திகா, இறுதியில் பன்ச் வெடிக்கும்போது... அதகளம். லவ் யூ ஆங்ரி ஏஞ்சல்! 
ஜூனியர் கோச் நாசர், மாதவனுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராதாரவி (இவர் மாதவனுக்கு யார் என‌ வெளிப்படும் காட்சி... அள்ளு). 'தண்ணியடிச்சா லிவர் கெட்டுப் போயிரும்ல. அதான் தண்ணியடிக்கும்போது லிவர் சாப்பிடுறேன். அப்போ இந்த லிவர்தானே கெட்டுப் போகும்' என சலம்பும் நாசர், 'நான் சாமிக்கண்ணு இல்லை... சாமுவேல்... நீ மதி இல்லை.... மடோனா' என கிறுகிறுக்கும் காளி வெங்கட் என அனைவரும் நச் காஸ்டிங். 

இயக்குநர் சுதா கொங்க்ரா மணிரத்னம் பட்டறையிலிருந்து வந்தவர் என்பத‌ பளிச் விசுவல்களில் நிரூபிக்கிறார். 2011 செம்ப்டம்பரில் மாதவனிடம் சொல்லபட்ட இந்த கதைக்காக ஷீட்டிங், போஸ்ட் புரொடக்ஷ‌ன் போக இரண்டரை ஆண்டுகள் பெண்கள் குத்துசண்டை குறித்த விபரங்களுக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுற்றி இருக்கிறார் என்பது படத்தின் டிடெய்லிங்கில் தெரிகிறது. க்யூடோஸ் சுதா!
பெண்கள் குத்துச்சண்டை உல‌கில் நடக்கும் அரசியலை, அதை முறியடிக்க பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரஸ்யமாக திரைக்கதையின் பிணைத்து, அதை வெற்றிகரமாக படமாக்கியதற்காக இயக்குனர் சுதாவின் கைகளை உயர்த்தி "அண்ட், த  வின்னர் ஈஸ்...." என‌ அறிவிக்கலாம்!
டெயில்பீஸ்: 'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!

Related Posts Plugin for WordPress, Blogger...