fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

April 29, 2012

இட்லியாக இருங்கள்


தலைப்பே ஒரு மாதிரி அசத்துகிறது அல்லவா. அதனால்தான் அதன் ஆசிரியர் (சோம வள்ளியப்பன்) அதன் subtitle ஆக இது "சாப்பிடும் இட்லி அல்ல சாதிக்க வைக்கும் இட்லி " என்று நம் சிந்தனையை சாப்பாட்டு பக்கம் இருந்து திருப்புகிறார். திருப்பிய அவர் இந்த புத்தகத்தை சமர்ப்பணமாய் வாசகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனுக்கும் சமர்பிக்கிறார். ஆகவே நானும் சமர்பனத்தை ஏற்றுக்கொண்டு தாள்கள் புரட்டிப் பார்த்தேன்

அருமையான விடயம் இப்புத்தகம் வழியாக ஆராயப்படுகிறது Emotional Intelligence அதாவது உணர்வு பற்றிய புத்திசாலித்தனம் பற்றியதே இந்த புத்தகம் அதற்கே ஆசிரியர் இட்லி எனப்பெயர் வைக்கிறார்

முதலில் பிரபலங்கள் சிலரின் வாழ்க்கை சம்பவங்கள் சிலதை  நாம்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பின்பு மூளை அதன் பகுதி மனம் ,அறிவு அதன் செயற்பாடு .  உணர்ச்சி வேறு அறிவு வேறு என்பதாய் உதாரணங்களோடு தெளிவாய் உணர்த்துகிறார். அத்தோடு  Emotional Intelligence ஆக நாம் செய்ய வேண்டியது அதனால் நமக்கு கிடைக்கும் பலன் இப்படி அலசுகிறது
இந்த புத்தகம் இதில்  Emotional Intelligenc    குறித்து ஆசிரியர்  குறிப்பிடுவது
"தேடுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்க வேண்டும். அதுதான் முயற்சிக்கு மரியாதை அந்த மரியாதையை அனைவரும் பெறவேண்டும் அதற்கான ஒரு வலி Emotional Intelligence"

இந்த புத்தகம் வாசித்த பின்னர் சிறிதாய் ஒரு மாற்றம் பாதிப்பு எனக்குள்  தெரிந்தது ஒரு நல்ல புத்தகம் செய்ய வேண்டிய வேலையில் ஒன்றை இது செய்கிறது ஒன்றல்ல பலதை. இந்த புத்தகத்தின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன் இந்த புத்தகத்துக்கு பிறகு அவரது மற்ற புத்தகங்களையும் தேட வைக்கிறார்.

             உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இத்துறை பற்றி தமிழில் வேறு புத்தகங்கள் இல்லை. இந்த எளிய அறிமுக அதே நேரம் போதுமான செய்திகளை கொண்ட இப்புத்தகத்தை எழுதியதற்காக சோம.வள்ளியப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 புத்தகத்தின் பெயர் :-         இட்லியாக இருங்கள்
புத்தகத்தின் ஆசிரியர் :-   சோம. வள்ளியப்பன்.
பதிப்பகம் :-                          கிழக்கு ஒலிப்புத்தகம்
வகை :-                             சுய முன்னேற்றம்
தலைப்புக்கள் :-                  15
பக்கங்கள் :-                         140
இந்திய விலை :-                60 ரூபா
இலங்கை விலை :-           225 ரூபா

இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.

உங்கள் அபார வெற்றியின் வாசலை இப்புத்தகம் மூலம் திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன். '

April 22, 2012

பேதை மகள்



ஒழுகுற வீடு ஒன்டுதான்
எங்களோட சொத்து
பள்ளிக்குச்  சென்று படி
காகிதப்பூ தலையில சூடாத
மல்லிகை பூ நான் பாக்கன்
பெத்த மகளை அனுப்பி வச்சான்
சொத்தில்லா அந்த அப்பன்

நல்லாத்தான் படிச்சா அவள்
பாடத்தவிட அவன
அவன்ட கை பிடிச்ச போதையில
பள்ளிக்கூடம் தனை மறந்து
பாதையிலே திரிந்திருந்தாள் பேதை மகள்

ஆத்தி மகன் வேலைக்காய்
கொழும்புக்கு சென்றவன்
கூத்தி மக்கள் சகவாசம்
களித்து விளையாட தலை விட்டான்

கை பிடிச்ச தலை மகன்
கரம்பிடிக்க வாருவான் என்று
ஏங்கித் தவிக்கிறாள்
மடியில் நீர் துளிகள்
விட்டு ஓட்டை பார்க்கிறாள்
அதில் மாற்றம் இல்லை
மன ஓட்டை மட்டும் பெரிதானது
 
 

April 16, 2012

இதுவரை நான்


வாழ்கையில் நான் செய்யும் உருப்படியான காரியங்களில் ஒன்று இந்த வாசித்தல் பல்வேறு தருணங்களில் என் உணர்வுகளை புத்தியை தீட்டும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு. நல்ல புத்தகங்கள் நல்ல  நண்பன் என் தனிமைகான துணை நான் வாசித்து ரசித்த புத்தகங்களை உங்களுடன் பகிர்கிறேன் புத்தகக்கடையில் சேமிக்கிறேன்  

                                              இதுவரைநான்
எனது கவிஞனின் நூல் ஆம் கவிப்பேரரசு வைரமுத்துவை எனது கவிஞன்  என சொல்வதில் பெருமிதம் எனக்கு அவரது வரிகள், புத்தகங்கள் மீது தீரக் காதல் எனக்கு. என் கவிஞன் தன்னைப் பற்றி எழுதிய புததகமே இதுவரை நான்

தலைப்பை பற்றி இப்புத்தகத்தின் ஆசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார்
இதுவரைநான் எனும் இந்தப் படைப்பு சுயசரிதம் அன்று எனக்கு சுயம் உண்டே  தவிர சரிதம் கிடையாது 
எத்தனை  அடக்கமான பேச்சு இது உங்கள் தன்னடக்கம் வைரமுத்து ஐயா நீங்கள் எமக்கு என்றுமே சரிதம்தான்

இந்த புத்தகத்தில் கவிப்பேரரசு பிறப்பு தொடக்கம் அவரது முதல் பையன் பிறப்பு வரையிலான விடயங்களை  அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக தந்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் வாழ்கையின் எதார்த்தம் சொல்கிறது

இந்த புத்தகம் பற்றி கவிப்பேரரசு கடைசியாய் சொல்கிறார்
இது 
சுயம் தேடியலைந்த 
ஓர் இளைஞனின் சுயசரிதை 
எழுதப்பட்ட போது வயது இருபத்தியெட்டு    

இந்த புத்தகம்  வாசித்து முடித்த பின்பு என் மீதும் என் வாழ்வு மீதுமான நம்பிக்கையின் பெறுமதி இன்னும்  அதிகமானது

இதுவாரை நான் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்

Related Posts Plugin for WordPress, Blogger...