
வனத்திலிருந்து வண்டு வந்து
பூத்திருந்த பூ கடித்து
கனிவுடன் காதல் சொன்ன
கற்கண்டுப் பொழுதுகள்
தையல் தலை தனை தடவி
காதோரம் உதடு வைத்து
உதட்டு வழி காதல் சொன்ன
உன்னத நினைவுகள்
கோகிலத்து பறவையொன்றை
மரக்கிளை மீதிருந்து
கூவி அழைத்தெடுத்து
குயில் குரலால் காதல் சொல்லி
குதுகலித்த உள்ளங்கள்
இடி மின்னல் மழை பார்த்து
மின்னொளிகள் அனைத்து விட்டு
மெழுகுதிரி வெளிச்சத்தில் கவிதையில்
மெழுகாய் உருகிய நிமிடங்கள்
அனைத்தும் ஏதோ சொல்கிறது
தொலைந்து விட்டோம்...