
கவிதை மீதான
காதல் என்னில் எப்போது பிறந்தது நான் இன்னும் தேடி விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும்
ஒன்று. பொதுவாகவே வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் பூஜ்ஜியத்தால் பெருக்கப் பட்ட சூன்யங்கள்.
எத்தனை கவிஞ்சர்கள் எத்தனை கவிதைகள் தேடி பொறுக்கி படித்தும் இன்னும் அந்த ரசனையும்
தாகமும் அடங்கியதாக இல்லை.
கவிதைகள் வாசிப்பது
ஒரு ரசனை என்றால் கவிதைகளை பிரசவித்த கவிஞன் வாசிக்க கேட்பது இன்னுமொரு ரசனை. காரணம்
அதை பிரசவித்தவனுக்கே வாசிப்பவனை விட அந்த கவிதையின்...