
அடுக்கு மாடி அடிவிழுந்த சோகத்தில்
மண்வீடோ மட்டற்ற மகிழ்ச்சியில்.
தூக்கம் தொலைத்து காசு காப்பதற்காய்
அமைதி தொலைத்து பஞ்சு மெத்தையில்
அல்லாடுது பணக்கார மனம்.
வேலை முடித்து களைப்பு துடைப்பதற்காய்
உலகம் மறந்து தூங்கி கிடக்கிறது
தெரு வோரத்தில் ஏழை மனம்....