
தலை சாய்த்து
கண்ணயரும் பொழுதுகளில்
வரும் கணாக்கள்
அதில் நீ வந்தால்
கொள்ளை பிரியம் எனக்கு
அன்றொரு நாள்
செவ்வானச் சிதறல்களின்
கீழிருந்து
சில்லுகள் சேமிக்கிறேன்
காற்றலுத்தம் அதிகமாகி
சில்லுகள் சிதறின.
காலத்தை பற்றி இழுக்கிறேன்
அது எனை எட்டி உதைக்கிறது.
ரோஜா இதழ்கள் புசிக்கிறேன்
அதிலும் முட்கள் முளைகின்றன
நாட்கள் எண்ணி உறவுகள்
மனங்களுக்கு மதிப்பில்லை
ஊருக்காய் புன்னகை
உள்ளுக்குள் பூகம்பம்.
இவை ஏன் என் கணாக்களில்
நீ எனை விட்டு போகிறாயா?
நிஜங்கள்...