மலையாள சினிமாவும் கதையும் கதை மாந்தர்களும் எமது வாழ்வோடு நாம் சந்திக்கும் மனிதர்களோடு ஒன்றிப்போவதால் என்னமோ எனக்கு மலையாள சினிமா மீது அலாதி பிரியம். சில படங்கள் மனதோடு சேர்த்து கண்களையும் நிறைத்து விடும் அப்படிதான் நான் அண்மையில் பார்த்த"Kadina Kadoramee Andakadaham" திரைப்படம் மனதுக்கு நெருக்கமாகி போனது கிட்டத்தட்ட ஒரு தசாப்பதம் கடல்தாண்டி எனக்கு கழிய போகிறது இத்தனை காலம் இந்த நாட்டில் நாடுவிட்டு வந்த நாடோடிகளில் பல கஷ்டங்களை கண்டிருக்கிறேன்...